WordPress 2.5 இற்றைப்படுத்தினால்…
Apr 9th, 2008 by மயூரேசன்
வழமை போல புதிய வேர்ட்பிரஸ் பதிப்பான 2.5 கிடைத்ததும் அதை இற்றைப்படுத்த முடிவெடுத்தேன். நான் பொதுவாக பன்டாடிஸ்கோ இடைமுகம் மூலம் ஒரு சொடுக்கலில் இற்றைப்படுத்திவிடுவது வழமை.
இம்முறையும் அதைப்போல தமிழ், ஆங்கிலம் இரு வலைப்பதிவுகளையும் இற்றைப்படுத்தினேன். முதலில் ஆங்கிலப் பதிவை இற்றைப்படுத்தினேன். என்னதான் ஆங்கிலப் வலைப்பதிவிற்கு அதிகமானோர் வந்தாலும் தமிழ் வலைப்பதிவு மேல் இருக்கும் அன்பு அதன் மேல் இல்லை. அதனால் சோதனை எல்லாம் ஆங்கிலப் பதிவு மேல்தான்.
ஆங்கிலப் பதிவு இற்றைப்படுத்தப்பட்டதும், தளத்தைச் சென்று பார்த்தேன் அனைத்தும் ஜோராக இருந்தது. உடனே தமிழ் பதிவையும் இற்றைப்படுத்தினேன் அங்குதான் விளைந்தது துன்பம்.
Warning: Invalid argument supplied for foreach() in /home/mayuonli/public_html/blog/wp-includes/classes.php on line 92
இதைப் பார்த்ததும் எனக்கு காதுக்கால புகைபோகத் தொடங்கிவிட்டது. அதிகப் பிரசங்கி வேலை ஏதாவது பார்துவிட்டோமோ என எண்ணி வேர்ட்பிரஸ் உதவி மன்றத்தில் உதவி கேட்டேன். அங்கும் ஒரு பதிலும் இல்லை. அதன் பிறகு மீண்டும் பழைய பதிப்பான 2.3.3 க்கு மாறுவது என்று கோப்புகளை எல்லாம் அழித்து 2.3.3 க்கு மாறிவிட்டேன்.
இந்த நேரம் பார்த்து என் பிரைச்சனையைப் பற்றி கேள்விப்பட்டு ரவி ஓடிவந்து என்னாச்சு ஏதாச்சு என்றார். வேர்ட்பிரஸூக்கு ஒன்றேன்றால் அவர் எப்படி தாங்குவார்.. ஹி.. ஹி…
அவர் சொல்லத்தான் புரிந்த்து அந்த பிழைச்செய்திக்கான காரணம் வார்ப்புரு புதிய வேர்ட்பிரஸ் 2.5 ஐ ஆதரிக்காததுதான். ஆங்கில வலைப்பதிவில் பாவித்த வார்ப்புரு இதை ஆதரித்ததால் அந்த வலைப்பதிவு இந்த பிழைச் செய்தியை காட்டவில்லை.
அட.. அம்புட்டுதானா? இதுக்கு இப்படி பயந்து தரவுத்தளத்தை மீள சேமிக்கும் அளவுக்குச் சென்றேனே… கிட்டத்தட்ட என் உள்வரும் தொடுப்புகளை இழந்துவிட்டதாகப் பயந்தேன். ஆயினும் permalink கட்டமைப்பை மீள மாற்றி அமைத்ததும் எல்லாம் சரியாகிவிட்டது.
உங்களுக்கு வேர்ட்பிரசில் பிரைச்சனை வந்தால் என்ன செய்வது??
- முதலில் பதட்டப்படக் கூடாது
- பிழைச் செய்தியை இட்டு ஒரு கூகிள் தேடல் போடுங்கள்
- வேர்பிரஸ் மன்றத்தில் ஒரு கோரிக்கை வையுங்கள்
- ஒரு வேர்ட்பிரஸ் பயனரை அணுகுங்கள்
மேற்கண்ட படிகளில் ஓரிடத்தில் உங்களுக்கான விடை கிடைக்கும்.
வேட்பிரஸ் வாழ்க்!!!
Enjoyed my post.. then buy me a cofee
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
அன்புள்ள மயூரேசன்,
உங்கள் பதிவின் விருந்தினர் யார் கண்களிலும் தென்படாமல் நீங்கள் பல வார்ப்புருக்களை மாற்றியமைத்து, எது பதிவைச் சிதைக்காமல் சமர்த்தாகச் செயல்படுகிறதோ, அதனை முடிவாகத் தெரிவு செய்து இற்றைப் படுத்த ஏதுவாக கீழ்க்காணும் மூன்று செருகுநிரல் செயல் நீட்சிகள் இருக்கின்றன:-
1. Theme Tester
2. User Level Themes
3. Theme Test Drive
எஸ்.கே
நண்பரே, உங்கள் வார்ப்புருவின் header.php -இல் <html> tagஐ கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கவும்.
<html xmlns="http://www.w3.org/1999/xhtml" lang="ta">உலாவியில் தமிழ் மொழிக்கென தனியான எழுத்துருக்களை பயன்படுத்தும் என் போன்றவர்கள் உங்கள் தளத்தை நல்ல முறையில் பார்வையிட இது உதவும்.