இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடைய நண்பனுடன் உரையாட வேண்டியிருந்தது. ஆனால் என் உபுண்டு இயங்கு தளத்தில் ஸ்கைப் இருக்கவில்லை. ஆகவே ஸ்கைப் பதிவிறக்க தளத்தில் ஸ்கைப்பை இறக்கிக்கொண்டேன். பதிவிறக்கியபோதும் அந்த ஸ்கைப் உபுண்டு பழைய பதிப்புகளுக்கானது என்று அறிந்துகொண்டேன். சரி என்னானாலும் பரவாயில்லை என்று நிறுவிக்கொண்டேன்.
பலத்த சந்தேகத்துடன் புகுபதிகை செய்தபோது பிரைச்சனை இல்லாமல் புகுபதிகையானது. பின்னர், ஒலி அரட்டையை ஆரம்பிக்க முயன்றபோது ஸ்கைப் ஓடியோ எர்ர் என்று பிழைச் செய்தி தர ஆரம்பித்தது. சலித்திப் போய் இணையத்தைத் தேடியபோது ஒரு இணையத்தளம் இதற்கான பிரைச்சனை pulseaudio எனும் செயலி என்றும் அதை நீக்கினால் எல்லாம் சரியாகும் என்றிருந்தார்கள். நானும் அவர்கள் கூறியபடி பின்வரும் கட்டளையை இயக்கி பல்ஸ்ஓடியோவை நீக்கினேன்.
killall pulseaudio
sudo apt-get remove pulseaudio
sudo apt-get install pulseaudio ubuntu-desktop
ஆகா என்ன அருமை, இப்போது குரல் அரட்டை மட்டுமல்ல, காணோளி அரட்டையும் அடிக்க கூடியதாக உள்ளது.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!


நல்ல தகவல்- நன்றி
எனக்கும் இதே பிரச்சினை இருந்து ஒருவாறாக தீர்த்துவிட்டேன்…
நீங்கள் தனிப்பதிவாகவே போட்டுவிட்டீர்கள்