ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான்.
இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.
16 வயது தம்பி போட்ட சில ட்விட்டர் சாம்பிள்களைக் கீழே பாருங்கள்
All swans in England are the property of the queen or king.
In 1770, a bill proposing that women using makeup should be punished for witchcraft was put forward to the British Parliament.
Orgies were originally religious events. They were originally offerings to the gods.
இவன் எழுதிய சில தனி நபர்கள் பற்றிய ட்விட்கள் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
ABC செய்திகளில் இது பற்றிய செய்தி.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!




//ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் //
என்ன கொடுமை சரவணா இது….
கன்கொன் பாவம்…. அவன் ஒரு அப்பாவி….
அவன் இப்ப ருவீற்றர் பாவிக்கிறேல…..
எண்டாலும் உந்தச் செய்தியைக் கேள்விப்பட்டன்…
நானும் உவர/ன பின்தொடருறன்…. பையன் நல்லாத்தான் ருவீற்றுறான்…..
பகிர்வுக்கு நன்றி….