உபுண்டுவில் ஆர்.ஏ.ஆர் முறையில் சுருக்கப்பட்ட கோப்புகளை இன்று திறக்க முயன்றபோது அது முடியாமல் போனது. காரணத்தைத் தேடிப்பார்க்கையில் உபுண்டுவுடன் அதற்கான ஆதரவு இயல்பிருப்பாக இல்லை. நீங்கள் அதை உயிர்ப்பூட்டிக்கொள்ள வேண்டும்.
ஆர்.ஏ.ஆர் தொழில்நுட்பம் உரிமம் கொண்டிருப்பதால் அதை அவர்கள் இயல்பிருப்பாக உபுண்டுவில் தருவதில்லை. பின்வரும் நிரலை உங்கள் டேர்மினலில் இயக்கி rar ஆதரவை உபுண்டுவில் உயிர்ப்பூட்டுங்கள்.
sudo apt-get [...]
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடைய நண்பனுடன் உரையாட வேண்டியிருந்தது. ஆனால் என் உபுண்டு இயங்கு தளத்தில் ஸ்கைப் இருக்கவில்லை. ஆகவே ஸ்கைப் பதிவிறக்க தளத்தில் ஸ்கைப்பை இறக்கிக்கொண்டேன். பதிவிறக்கியபோதும் அந்த ஸ்கைப் உபுண்டு பழைய பதிப்புகளுக்கானது என்று அறிந்துகொண்டேன். சரி என்னானாலும் பரவாயில்லை என்று நிறுவிக்கொண்டேன்.
பலத்த சந்தேகத்துடன் புகுபதிகை செய்தபோது பிரைச்சனை இல்லாமல் புகுபதிகையானது. பின்னர், ஒலி அரட்டையை ஆரம்பிக்க முயன்றபோது ஸ்கைப் ஓடியோ எர்ர் என்று பிழைச் செய்தி தர ஆரம்பித்தது. சலித்திப் போய் இணையத்தைத் [...]