இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடைய நண்பனுடன் உரையாட வேண்டியிருந்தது. ஆனால் என் உபுண்டு இயங்கு தளத்தில் ஸ்கைப் இருக்கவில்லை. ஆகவே ஸ்கைப் பதிவிறக்க தளத்தில் ஸ்கைப்பை இறக்கிக்கொண்டேன். பதிவிறக்கியபோதும் அந்த ஸ்கைப் உபுண்டு பழைய பதிப்புகளுக்கானது என்று அறிந்துகொண்டேன். சரி என்னானாலும் பரவாயில்லை என்று நிறுவிக்கொண்டேன்.
பலத்த சந்தேகத்துடன் புகுபதிகை செய்தபோது பிரைச்சனை இல்லாமல் புகுபதிகையானது. பின்னர், ஒலி அரட்டையை ஆரம்பிக்க முயன்றபோது ஸ்கைப் ஓடியோ எர்ர் என்று பிழைச் செய்தி தர ஆரம்பித்தது. சலித்திப் போய் [...]

