1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்
2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்
3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)
4. அப்புறம் என்ன, கலாயுங்க
எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! [...]
இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.
தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது
அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் [...]
தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகளுடன் [...]
இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.
அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது ஒரு [...]
பணம் தரும் வலைப்பதிவு
பலரும் பல பதிவுகளில் பிரித்து மேய்ந்த தகவல் என்றாலும் நானும் என்பாட்டிற்கு இணையத்தில் பணம் செய்தல் பற்றிய ஒரு தொடரை எழுத இருக்கின்றேன். முதலாவது பாகம் வலைப்பதிவருக்கானது. வலைப்பதிவில் விளம்பரம் காட்டல் சம்பந்தமானது.
பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, வலைப்பதிவில் பணம் செய்ய முடியுமா? ஆம் நிச்சயமாக முடியும். இதை இலகுவில் யாரும் நம்பத் தயார் இல்லை. டேய்.. அவனுகள் ஏமாத்திப் போடுவாங்களடா. உன்னட்டை ஆதாரம் இருக்கா? இப்படிப் பல கேள்விகளால் கணை தொடுப்பர். [...]