பாரதி எயார்டெல் நிறுவனம் பலத்த இழுத்தடிப்புகளுக்குப் பின்பு 12ம் திகதி, அதாவது வரும் திங்கட்கிழமை இலங்கையில் அதன் சேவையை ஆரம்பிக்க உள்ளது. ஏற்கனவே இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குள்ளநரித்தன விளையாட்டுகள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு போன்றவற்றினால் ஏற்றப்பட்ட சுணக்கம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
கொழும்பு மாநகரம் எங்கும் ஏயார்டெல் பதாகைகளை காணக்கூடியதாக உள்ளது. தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. பெருமளவில் வரவேற்பிருந்தாலும், உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் போன்ற தேசிய உணர்வும் இலங்கை மக்களிடையே இப்போது துளிர்விட்டுள்ளது. [...]


