பெட்டகம்

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz [...]

கல்லூரி விமர்சனம்

திரைப்படம் என்றால் அழகான ஹீரோ இருக்க வேண்டும், அழகான துணை நடிகர்கள் இருக்க வேண்டும், பெரிய செட்டுகள் இருக்க வேண்டும், ஹிப் ஹொப் பாடல்கள் இருக்க வேண்டும், நமீதா வந்து குத்துப் போட வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் எதிர்பார்ப்பர்.இப்படியான எதிர்பார்ப்புகளால் இத்தனை நாள் பார்க்காமல் இருந்த திரைப்படம்தான் கல்லூரி. நேற்று நேரம் போக்க சும்மா பார்ப்போம் என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நிறுத்த முடியாமல் பார்த்து முடித்தேன்.

கதைக்களம் சிறிய [...]

ஓம் ஷாந்தி ஓம் – ஒலி விமர்சனம்

உலகம் முழுவதும் வெளியாகிய திரைப்படமே இந்த ஓம் ஷாந்தி ஓம். அனைவரும் விமர்சனம் இட்டு ஓய்ந்துள்ள வேளையில் இந்தப் பதிவை நான் [...]

லைசன்ஸ் டு வெட்!!!

நேற்று மாலை மிகவும் அலுப்படிக்கவே அருகில் இருந்த டி.வி.டி கடைக்குச்சென்று எடுத்துப் பார்த்த படமே லைசன்ஸ் டு வெட்.

ஒரு திருமணக் காட்சியைக் காட்டுவதுடன் திரைக்கதை ஆரம்பிக்கின்றது. ஒரு பாதிரியார் காதலின் அத்தியாயங்களை விபரிப்பதுடன் ஏன் திருமணங்கள் பிசகுகின்றன என்றும் கூறுகின்றார்.

பின்னர் ஒரு ஜோடி எவ்வாறு சந்திக்கின்றது. அவர்கள் எவ்வாறு காதலில் வீழ்கின்றார்கள், எவ்வாறு அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் முடிக்குமாறு வேண்டுகின்றான் என்பதைக் காட்டுகின்றார்கள்.

பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்கள் ஊரில் உள்ள ஒரு தேவாலயத்தில் [...]

பில்லா – வந்துட்டம்ல

தலைப்பைப் பார்த்து குளப்பம் அடையாதீங்க. அதாவது பில்லா திரைப்படத்தில் அஜித் சொல்லும் வசனம் “I’m back”. அதைத்தான் தமிழாக்கி தந்திருக்கின்றோம். சரி இனி விமர்சனப் பக்கத்திற்குச் செல்வோம்.

திரைக்கதை நீங்கள் ஏற்கனவே அறிந்ததுதான். ஹிந்தி டொன் திரைப்படத்தில் இருந்து சற்று வேறு பட்டுள்ளது. பில்லா ஒரு சர்வதேசக் குற்றவாளி, அவரை மடக்க மலேசியாவில் கால் பதிக்கின்றார் பொலீஸ் அதிகாரி ஜே!. ஒரு கட்டத்தில் ஜே பில்லாவை மடக்கி கொலை செய்து விடுகின்றார்.

பின்னர் பில்லா போன்ற தோற்றம் உள்ள வேலுவை [...]

ஆவ்டத சண் செட் – விமர்சனம்

நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழக் கூடிய என்னொரு திரைப்படம்தான் இந்த After the sunset. ஒரு வைரத்தை ஒரு கள்வன் களவாடுவதுடன் திரைப்படம் தொடங்குகின்றது. வைரத்தைக் களவாடும்விதம் அழகானது. பரபரப்பாகச் செல்லும்.

யார் அந்தக் கள்வன் என்று பார்த்தால் பிரபல நடிகர் பியர்ஸ் புரொஸ்னன். எப்.பி.ஐ ஏஜென்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அந்த வைரத்தைக் களவாடிவிடுகின்றார்.

நெப்போலினின் மூன்று வைரங்களில் இரண்டாவது வைரம் இது. ஏற்கனவே ஒரு வைரத்தை இந்தக் கள்வன் (மக்ஸ்) களவாடிவிட்டான். கள்வன் என்று வந்தாலே அங்கு [...]

அழகிய தமிழ் மகன் – விமர்சனம்

பலரும் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியபின்னரும் விஜய் படம்தானே போய்த்தான் பார்ப்போம் என்று நேற்று சினிசிட்டி திரையரங்கில் இரண்டு நண்பர்களுடன் குதித்துவிட்டேன். 2.30 திரைப்படத்திற்கு 1.30 என்று நினைத்து 12.45க்கே நண்பர்கள் திரையரங்கிற்குச் சென்றுவிட்டதால் நான் கடைசிநேரத்தில் வந்தாலும் எனக்காகவும் நுழைவுச்சீட்டு வாங்கி வைத்திருந்தார்கள்.

உள்ளே போய் அப்பாடா என்று நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டோம், வழமையான விளம்பரக் கச்சேரிக்குப் பிறகு திரைப்படம் தொடங்கியது. நாயகன் அறிமுகம், தடால் படால் அடி பிடி, ஒரு அறிமுகப்பாடல் என்று திரைப்படம் தொடங்கியது. அறிமுகப் [...]

ட்ரான்ஸ்ஃபோமர்ஸ்

பல்கலைக்கழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முடிவடைந்து விட்டதால் ஒரு திரைப்படம் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். என்ன பார்க்கலாம் என்று நினைத்தபோது, பரீட்சை காரணமாக தியட்டரில் பார்க்க முடியாமல் போன ரஷ் அவர் 3, அல்லது ட்ரான்ஸ்போமர்ஸ் பார்ப்பது என்று முடிவு செய்தேன். ஏற்கனவே எனது உறவுக்காரப் பொடியன் ஒருவன் ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் திரைப்படத்தை இணையத்தில் இறக்கி வைத்திருந்தான். எனவே அதைப் பார்ப்பது என்று முடிவுசெய்தேன்.

ஏற்கனவே இதைப்பார்த்த என்னுடைய அனேக நண்பர்களும், அந்தமாதிரிப்படம் மச்சான் கட்டாயம் பார் என்று பரிந்துரைத்திருந்தனர். [...]

சக்தே இந்தியா – திரை விமர்சனம்

[...]

ஹரி பொட்டர் 5 – திரைப்படம்

 

 

ஹரி பொட்டர் புத்தகம்தான் வாசிச்சுமுடிந்த பாடாய் இல்லை (70 வீதம் வாசிச்சாகிவிட்டது) சரி படத்தையாவது பார்த்து தொலைப்போம் என்று நேற்று டிவிடிக் கடைக்குப் போக முடிவெடுத்தேன்.

 

இங்க இருக்கிற தமிழ் பொடியள் ஹரி பெயரைக் கேட்டாலே ஓடிவிடுவாங்கள், இருக்கிற சில சிங்களப் பொடியளும் பெட்டயளும்தான் ஹரி புத்தகம் படம் என்று பைத்தியமா இருக்குங்கள். ஏற்கனவே படம் பார்த்த சில நண்பர்களிடம் கருத்துக் கேட்டபோது… It’s ok.. It’s ok macho! என்றே அவர்களது பதில் வந்தது. என்னானாலும் பார்ப்பது என்று [...]