கார்த்தி & கஜல் அகர்வால்
காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார்.
இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது.
கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் [...]
ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.
வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று [...]