பெட்டகம்

பையா விமர்சனம்

வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன்.

அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன்.

திரைப்படம் தொடங்கியதில் இருந்து திரைப்படம் [...]

தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு

கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன்.

http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் [...]

பிளாக்கர் தமிழ் இடைமுகம்

இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் [...]

கூகிள் ஜிடாக் அரட்டை தமிழில்

இப்போது ஜிமெயிலில் நேரடியாகத் தமிழில் அரட்டை அடிக்கலாம். கூகிள் இந்தியா இதற்கான வசதியை செய்து வழங்கியுள்ளது. இவ்வாறு அரட்டை அடிப்பதற்கு முதலில் en2ta.translit@bot.talk.google.com எனும் முகவரியை உங்கள் தொடர்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின்னர் உங்களுக்கு அரட்டை அடிக்க விருப்பமான நண்பரை அரட்டைக்கு அழையுங்கள். பின்னர் அந்த அரட்டையை குழு அரட்டை ஆக்குங்கள். அந்த குழு அரட்டைக்கு en2ta.translit@bot.talk.google.com ஐயும் அழையுங்கள். இப்போ ஆங்கிலத்தில் தட்டச்சிட தட்டச்சிட தமிழில் இந்த பாட் உங்களுக்கு மாற்றிக்காட்டும்.

இதில் இருக்கிற பிரைச்சனை என்ன வென்றால் இரண்டு தடவை [...]

இப்போ ஜிமெயில் தமிழில்

இப்போது ஜிமெயிலுக்குத் தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டுள்ளது. தமிழுடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஜிமெயில் இடைமுகம் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் கிட்டத்தட்ட 90 வீதமான இந்தியர்கள் தமது சொந்த மொழியில் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக்கொள்ள settings சென்று Language என்பதில் தமிழ் என்பதைத் தெரிவு செய்யுங்கள்…

கூகிள் வாழ்க… தமிழ் அதனிலும் [...]

வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue reading வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?

IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்

இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் பதிவை இடும் போது ஒரு விடையத்தைக் கவனித்தேன். அதாவது Firefox தமிழ் முகவரிகளை அழகாகக் காட்டுகின்றது. கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.

IE 8

Firefox beta 3

விக்கீப்பீடியாப் பக்கங்களையும் சென்று பார்த்தேன் அழகாக காட்டுகின்றார். அச்சா குட்டி!

இப்போ மைக்ரோசாப்ட் அண்ணாச்சி என்ன சொல்கிறாராம்!!!

Firefox 3  Beta [...]

தமிழ் மொழி பெயர்ப்பான் விரைவில்???

கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.

தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.

உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.

இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள [...]

தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்

தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.

அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.

 அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.

http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் [...]

2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்

கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார்

தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..

எப்படி செய்வது?

http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு [...]