பெட்டகம்

உபுண்டு 9.04 ல் தமிழ் 99

பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை நான் கேட்டபடி அனுப்பிப் போட்டான்.

சீ.டிக்கள் தாபாலில் வந்து கிடைத்த நிமிடம் ஒரே தர்ம சங்கடமாகிவிட்டது. இவங்கள் மினக்கட்டு அனுப்பியிருக்காங்களே, இந்த சீ.டியை அநியாயமாக விடக்கூடாது என்று நினைத்தேன். அதன் விழைவாக எனது [...]

பாமினியிலிருந்து தமிழ் 99 நோக்கி

2008 ல் செய்ய வேண்டிய வேலைகளுள் ஒன்றாக, பாமினி முறையில் இருந்து தமிழ் 99 முறைக்கு மாறுவது என்று முடிவு செய்தேன்.

 மாற நினைத்ததற்கு முதல் காரணம், அனைத்திற்கும் தமிழில் ஒரு நியமமான முறை இருக்க வேண்டும் என்று நினைத்ததுதான். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு, இல்லாவிட்டால் வீழ்வுதான். அதைவிட தமிழைத்த தமிழாய் தட்டச்சிட வேண்டும் என்பதும்தான். இம் முயற்சியில் ஈடுபட ரவியின் பல கட்டுரைகளும், தமிழ்99.org என்ற தளமும் உந்துதலாக இருந்தன.