ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.
வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் [...]
Image via Wikipedia
பாவப் பட்ட ஜக்கி சான், உலகில் எத்தனையோ நகரங்கள் இருக்க எங்கட சென்னைக்கு வந்தார். தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிலும் குடு குடு என்று சிறு பிள்ளை போல கலக்கினார். இருந்ததவர்களை எல்லாம் தன் கள்ளம் கபடமற்ற செயல்களால் சிரிக்க வைத்தார். வணக்கம் என தமிழில் சொல்லி பேசத் தொடங்கினார்.
எல்லாம் முடிந்து ஊர் திரும்பினால் அவருக்கு துன்பம் காத்திருந்தது. இவர் இந்தியாவில் மற்றய இந்தியக் கலைஞர்களை மதிக்கவில்லை, இந்தியாவின் தண்ணீர் போத்தலில் தண்ணி குடிக்கவில்லை, [...]
இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.
ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் [...]
திரைப்படம் என்றால் அழகான ஹீரோ இருக்க வேண்டும், அழகான துணை நடிகர்கள் இருக்க வேண்டும், பெரிய செட்டுகள் இருக்க வேண்டும், ஹிப் ஹொப் பாடல்கள் இருக்க வேண்டும், நமீதா வந்து குத்துப் போட வேண்டும் என்றெல்லாம் நம்மவர்கள் எதிர்பார்ப்பர்.இப்படியான எதிர்பார்ப்புகளால் இத்தனை நாள் பார்க்காமல் இருந்த திரைப்படம்தான் கல்லூரி. நேற்று நேரம் போக்க சும்மா பார்ப்போம் என்று நினைத்து இந்தப் படத்தைப் பார்த்தேன். ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை நிறுத்த முடியாமல் பார்த்து முடித்தேன்.
கதைக்களம் [...]
தலைப்பைப் பார்த்து குளப்பம் அடையாதீங்க. அதாவது பில்லா திரைப்படத்தில் அஜித் சொல்லும் வசனம் “I’m back”. அதைத்தான் தமிழாக்கி தந்திருக்கின்றோம். சரி இனி விமர்சனப் பக்கத்திற்குச் செல்வோம்.
திரைக்கதை நீங்கள் ஏற்கனவே அறிந்ததுதான். ஹிந்தி டொன் திரைப்படத்தில் இருந்து சற்று வேறு பட்டுள்ளது. பில்லா ஒரு சர்வதேசக் குற்றவாளி, அவரை மடக்க மலேசியாவில் கால் பதிக்கின்றார் பொலீஸ் அதிகாரி ஜே!. ஒரு கட்டத்தில் ஜே பில்லாவை மடக்கி கொலை செய்து விடுகின்றார்.
பின்னர் பில்லா போன்ற தோற்றம் உள்ள [...]
பலரும் பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தியபின்னரும் விஜய் படம்தானே போய்த்தான் பார்ப்போம் என்று நேற்று சினிசிட்டி திரையரங்கில் இரண்டு நண்பர்களுடன் குதித்துவிட்டேன். 2.30 திரைப்படத்திற்கு 1.30 என்று நினைத்து 12.45க்கே நண்பர்கள் திரையரங்கிற்குச் சென்றுவிட்டதால் நான் கடைசிநேரத்தில் வந்தாலும் எனக்காகவும் நுழைவுச்சீட்டு வாங்கி வைத்திருந்தார்கள்.
உள்ளே போய் அப்பாடா என்று நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டோம், வழமையான விளம்பரக் கச்சேரிக்குப் பிறகு திரைப்படம் தொடங்கியது. நாயகன் அறிமுகம், தடால் படால் அடி பிடி, ஒரு அறிமுகப்பாடல் என்று திரைப்படம் தொடங்கியது. [...]
எல்லாரும் பார்த்து முடித்து இரண்டாம் தடவை மூண்றாம் தடவையும் பார்த்தபின்பு கடந்த சனிக்கிழமை அடியேனும் சிவாஜியின் தரிசனத்தைப் பெற்றுக்கொண்டேன்.
படத்தைப் பற்றி ஒரு வரியில் சொல்வதானால் பிரமாண்டம் பிரமாண்டம் பிரமாண்டம் என்பதேயாம். ரஜனியின் வயதைப் பற்றி நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அட அட அட என்ன ஒரு வேகம் என்ன ஒரு நடை. வயதானாலும் ஸ்டைலு மட்டும் இன்னும் குறையவே இல்லை என்று நீலாம்பரி சொன்னதுதான் ஞாபகத்திற்கு வருகின்றது.
ஆரம்பக் காட்சியில் ஒரு முகம் மூடப்பட்ட நபரை [...]
அண்மையில் முடி திருத்தும் கடையில் சென்று காத்திருந்த வேளையில் சண் மியூசிக்கில் ஒரு பாடல் போனது.. ஜூன் போனால் ஜூலைக் காற்றே…. பாடலைக் கேட்டதும் அந்தப் படத்தைப் பார்ப்பது என்று முடிவு செய்தேன். நண்பன் ஒருவனிடம் எப்படிப் படம் என்று கேட்டதற்கு அவனும் நேரம் போகாட்டிப் பார் மச்சான் என்று சொல்லிவிட்டான்.சரி என்று மறு நாள் ஒரு சீ.டி கடையில் படத்தை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தேன். படத்தைப் பார்க்கத் தொடங்கியதும் ஒரேயடியாக வெறுக்கத் தொடங்கியது. [...]
போக்கிரி பார்த்த பின்பு திரையரங்கு சென்று ஒரு தமிழ் படம் பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவேயில்லை.இப்பொழுது ஒரு நிறுவனத்தில் பயிற்சிக் காலத்தில் இருப்பதால் கிழமை நாட்களில் நேரம் கிடைப்பதேயில்லை. கிழமை நாள் போனால் பரவாயில்லை என்று யோசித்தால் சனிக்கிழமையும் வேலை. அரை நேரம் என்ற பெயரில் 2 மணி வரையும் வேலை இருக்கும். அன்றும் வேலை முடிந்ததும் எனது நண்பனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அவன் வரத் தயாரா என்று கேட்டேன். மறு முனையில் சரி என்று பதில் வரவே [...]