Posted in சிறுகதை, தமிழ் on Jun 7th, 2008
var AdBrite_Title_Color = ‘0000FF’;
var AdBrite_Text_Color = ‘000000′;
var AdBrite_Background_Color = ‘FFFFFF’;
var AdBrite_Border_Color = ‘CCCCCC’;
var AdBrite_URL_Color = ‘008000′;
இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019
விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
கையில் [...]
Read Full Post »
Posted in சிறுகதை, தமிழ் on Nov 23rd, 2007
தனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது.
“ம்ஹூம்…. நித்திரையோடு ஓடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி [...]
Read Full Post »
Posted in சிறுகதை, தமிழ் on Sep 26th, 2007
எங்கோ ஒரு தூரத்து கூரையில் இருந்து சேவல் ஒன்று தன் முன்னங்காலில் எம்பி மிகுந்த பிராயத்தனத்துடன் ஒரு தடவை கூவியது. சூரியனின் கதிர் பட்டு அந்தச் சேவலின் சிறகுகள் பளபளத்தன. அங்கங்கே பறவைகள் தம்பாட்டுக்கு தாங்களும் “கீச்.. கீச்…” என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டிருந்தன. சூரியன் மேற்கில் அலுப்பு முறிக்கத் தொடங்கிவிட்டான்.
இத்தனையும் நிதானமாக நடக்க சுகுமார் மட்டும் பதறித் துடித்து நேரத்தைப் பார்த்தான். காலை நான்கு மணி இருக்கும், சுகுமார் எழுந்துவிட்டான். அருகிலே தூங்கிக்கொண்டு இருந்த தன் [...]
Read Full Post »
Posted in சிறுகதை, தமிழ் on Jun 14th, 2007
இன்றிலிருந்து சுமார் 28,000 ஆண்டுகள் பின்னோக்கிச் வரலாறு திரும்பிப் பார்க்கின்றது. தற்போதைய பிரான்சு, ஸ்பெயின் இடையில் உள்ள அந்தப் பரந்த சமவெளியில் ஒரு உருவம் நிலை குலைந்து நிலத்தில் குப்புறப் படுத்துக்கிடக்கின்றது.. அதுதான் நம் கதையின் நாயகன். ஒரு நியன்டதால் இனத்தை சேர்ந்த அரைமனிதன்.
“ஓ..ஜீ…!!!!” அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், இழப்பும் [...]
Read Full Post »
Posted in சிறுகதை, தமிழ் on Jun 12th, 2007
ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம் பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை. இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான் நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான்.
மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும் அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும் பிடிக்கும். அவள் கூட இன்று வெள்ளை [...]
Read Full Post »