ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.
வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் [...]

