உபுண்டுவில் ஆர்.ஏ.ஆர் முறையில் சுருக்கப்பட்ட கோப்புகளை இன்று திறக்க முயன்றபோது அது முடியாமல் போனது. காரணத்தைத் தேடிப்பார்க்கையில் உபுண்டுவுடன் அதற்கான ஆதரவு இயல்பிருப்பாக இல்லை. நீங்கள் அதை உயிர்ப்பூட்டிக்கொள்ள வேண்டும்.
ஆர்.ஏ.ஆர் தொழில்நுட்பம் உரிமம் கொண்டிருப்பதால் அதை அவர்கள் இயல்பிருப்பாக உபுண்டுவில் தருவதில்லை. பின்வரும் நிரலை உங்கள் டேர்மினலில் இயக்கி rar ஆதரவை உபுண்டுவில் உயிர்ப்பூட்டுங்கள்.
sudo apt-get [...]
வழமை போல புதிய வேர்ட்பிரஸ் பதிப்பான 2.5 கிடைத்ததும் அதை இற்றைப்படுத்த முடிவெடுத்தேன். நான் பொதுவாக பன்டாடிஸ்கோ இடைமுகம் மூலம் ஒரு சொடுக்கலில் இற்றைப்படுத்திவிடுவது வழமை.
இம்முறையும் அதைப்போல தமிழ், ஆங்கிலம் இரு வலைப்பதிவுகளையும் இற்றைப்படுத்தினேன். முதலில் ஆங்கிலப் பதிவை இற்றைப்படுத்தினேன். என்னதான் ஆங்கிலப் வலைப்பதிவிற்கு அதிகமானோர் வந்தாலும் தமிழ் வலைப்பதிவு மேல் இருக்கும் அன்பு அதன் மேல் இல்லை. அதனால் சோதனை எல்லாம் ஆங்கிலப் பதிவு மேல்தான்.
ஆங்கிலப் பதிவு இற்றைப்படுத்தப்பட்டதும், தளத்தைச் சென்று பார்த்தேன் அனைத்தும் ஜோராக இருந்தது. உடனே தமிழ் பதிவையும் இற்றைப்படுத்தினேன் அங்குதான் விளைந்தது துன்பம். Continue reading WordPress 2.5 இற்றைப்படுத்தினால்…
பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள். Continue reading இலவச SMS அனுப்புதல்
கூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை!
இதன் தமிழ் மொழி சொற் பிழை திருத்தி படுபயங்கரமாக வேலைசெய்கின்றது. இதை நம்பி யாராவது தமிழில் எழுதப் போனால் தமிழ் தாய் தற்கொலை செய்துவிடுவாள்.
இந்த சேவையை தமிழில் பெற Continue reading கூகிள் டொக்ஸ் தமிழி்ல்
இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன. இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு. Continue reading அட்சென்ஸ் & தமிழ் மொழி
வேர்ட்பிரஸ்.காம் பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் உங்கள் பதிவுகளின் முகவரிகள் ஒரு அர்த்தமுள்ள முகவரிகளாக இருக்கும். அதாவது Hello World என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டால் உங்கள் முகவரி பின்வருமாறு கிடைக்கும்.
உ+ம்: http://yourname.wordpress.com/Hello-world Continue reading வேர்ட்பிரசில் அர்த்தமுள்ள முகவரி
உங்கள் கணனியில் எவ்வாறு வழங்கியை நிறுவுவது என்பதற்கான வீடியோக் கையேட்டைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.. இது முற்றாகத் தமிழில் [...]