இப்போது பிளாக்கர் ட்ராஃப்ட்இல் தமிழ் இடைமுகம் கிடைக்கின்றது. விரைவில் பிளாக்கர்.காம் இல் இந்த இடைமுகம் கிடைக்கும் என்று நம்பலாம். தமிழ் உட்பட தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற பல இந்திய மொழிகளிலும் விரைவில் கிடைக்கும் [...]
எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue reading வேர்ட்பிரசில் த.ம கருவிப் பட்டை செயல்இழப்பதேன்?
கூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை!
இதன் தமிழ் மொழி சொற் பிழை திருத்தி படுபயங்கரமாக வேலைசெய்கின்றது. இதை நம்பி யாராவது தமிழில் எழுதப் போனால் தமிழ் தாய் தற்கொலை செய்துவிடுவாள்.
இந்த சேவையை தமிழில் பெற Continue reading கூகிள் டொக்ஸ் தமிழி்ல்
இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன. இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு. Continue reading அட்சென்ஸ் & தமிழ் மொழி
இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் பதிவை இடும் போது ஒரு விடையத்தைக் கவனித்தேன். அதாவது Firefox தமிழ் முகவரிகளை அழகாகக் காட்டுகின்றது. கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள்.
IE 8
Firefox beta 3
விக்கீப்பீடியாப் பக்கங்களையும் சென்று பார்த்தேன் அழகாக காட்டுகின்றார். அச்சா குட்டி!
இப்போ மைக்ரோசாப்ட் அண்ணாச்சி என்ன சொல்கிறாராம்!!!
Firefox 3 Beta [...]
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம்.
தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம்.
உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும்.
இந்த தளத்திற்குச் சென்று இது வரை உள்ள [...]
தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது.
அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல.
அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும்.
http://ta.wordpress.com என்ற முகவரிக்குச் சென்று தமிழ் வேர்ட்பிரசைக் [...]
கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார்
தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே..
எப்படி செய்வது?
http://translate.wordpress.com/ சென்று பயனர் கணக்கு உருவாக்கி மொழிபெயர்ப்பு [...]
இது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!!
Tamil : http://www.google.com/transliterate/indic/Tamil
Telugu : http://www.google.com/transliterate/indic/Telugu
Kannada : http://www.google.com/transliterate/indic/Kannada
Malayalam : http://www.google.com/transliterate/indic/Malayalam
இது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில தட்டச்சு உதவிகளையும் இது [...]