அதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் விலை $499 (£251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.
விளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி சந்தையிலும் [...]


