லைசன்ஸ் டு வெட்!!!
நேற்று மாலை மிகவும் அலுப்படிக்கவே அருகில் இருந்த டி.வி.டி கடைக்குச்சென்று எடுத்துப் பார்த்த படமே லைசன்ஸ் டு வெட். ஒரு திருமணக் காட்சியைக் காட்டுவதுடன் திரைக்கதை ஆரம்பிக்கின்றது. ஒரு பாதிரியார் காதலின் அத்தியாயங்களை விபரிப்பதுடன் ஏன் திருமணங்கள் பிசகுகின்றன என்றும் கூறுகின்றார். பின்னர் ஒரு ஜோடி எவ்வாறு சந்திக்கின்றது. அவர்கள் எவ்வாறு காதலில் வீழ்கின்றார்கள், எவ்வாறு அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் முடிக்குமாறு வேண்டுகின்றான் என்பதைக் காட்டுகின்றார்கள். பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்கள் ஊரில் [...]
ஆவ்டத சண் செட் – விமர்சனம்
நேரம் கிடைக்கும் போது பார்த்து மகிழக் கூடிய என்னொரு திரைப்படம்தான் இந்த After the sunset. ஒரு வைரத்தை ஒரு கள்வன் களவாடுவதுடன் திரைப்படம் தொடங்குகின்றது. வைரத்தைக் களவாடும்விதம் அழகானது. பரபரப்பாகச் செல்லும். யார் அந்தக் கள்வன் என்று பார்த்தால் பிரபல நடிகர் பியர்ஸ் புரொஸ்னன். எப்.பி.ஐ ஏஜென்களின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அந்த வைரத்தைக் களவாடிவிடுகின்றார். நெப்போலினின் மூன்று வைரங்களில் இரண்டாவது வைரம் இது. ஏற்கனவே ஒரு வைரத்தை இந்தக் கள்வன் (மக்ஸ்) களவாடிவிட்டான். கள்வன் [...]
ட்ரான்ஸ்ஃபோமர்ஸ்
பல்கலைக்கழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் நேற்று முடிவடைந்து விட்டதால் ஒரு திரைப்படம் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். என்ன பார்க்கலாம் என்று நினைத்தபோது, பரீட்சை காரணமாக தியட்டரில் பார்க்க முடியாமல் போன ரஷ் அவர் 3, அல்லது ட்ரான்ஸ்போமர்ஸ் பார்ப்பது என்று முடிவு செய்தேன். ஏற்கனவே எனது உறவுக்காரப் பொடியன் ஒருவன் ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் திரைப்படத்தை இணையத்தில் இறக்கி வைத்திருந்தான். எனவே அதைப் பார்ப்பது என்று முடிவுசெய்தேன். ஏற்கனவே இதைப்பார்த்த என்னுடைய அனேக நண்பர்களும், அந்தமாதிரிப்படம் மச்சான் கட்டாயம் பார் [...]
ஹரி பொட்டர் 5 – திரைப்படம்
ஹரி பொட்டர் புத்தகம்தான் வாசிச்சுமுடிந்த பாடாய் இல்லை (70 வீதம் வாசிச்சாகிவிட்டது) சரி படத்தையாவது பார்த்து தொலைப்போம் என்று நேற்று டிவிடிக் கடைக்குப் போக முடிவெடுத்தேன். இங்க இருக்கிற தமிழ் பொடியள் ஹரி பெயரைக் கேட்டாலே ஓடிவிடுவாங்கள், இருக்கிற சில சிங்களப் பொடியளும் பெட்டயளும்தான் ஹரி புத்தகம் படம் என்று பைத்தியமா இருக்குங்கள். ஏற்கனவே படம் பார்த்த சில நண்பர்களிடம் கருத்துக் கேட்டபோது… It’s ok.. It’s ok macho! என்றே அவர்களது [...]
Prison Break தொலைக்காட்சித் தொடர்
பிரிசின் பிரேக் எனும் தொடரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது வரை நான் பார்த்த ஆங்கிலத் தொலைக்காட்சிச் தொடர்களில் X-Files க்குப் பிறகு அதிகமாக இரசித்துப் பார்த்த தொடர் என்றால் இந்த Prison Break தான். அமெரிக்க அரச இயந்திரத்தை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு அப்பாவி நபரைப் பழிவாங்கத் துடிக்கிறார் ஒரு பெண். இவர் இதற்குத் துணையாக எப்.பி.ஐ ஏஜென்டுகளையெல்லாம் பணிக்கமர்த்துகின்றார். ஏதோ கத்தரிக்காய் வெட்டுவது போல டப்பு டப்பு என்று தன் எதிரிகளை கொலை செய்கின்றார். இது [...]
சக்கை போடும் ஹரி பொட்டர் 5ம் பாகம்
ஹரி போட்டர் ஐந்தாம் பாகம் திரைப்படமாக வந்து அமெரிக்காவில் சக்கை போடு போடுகின்றதாம். முதல் நாள் இரவுக் காட்சியிலேயே 12 மில்லியன் அமெரிக்க டாலரை அள்ளி எறிந்துவிட்டதாம் என்றால் பாருங்களேன். இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில் நம்ம சிவாஜி பட பட்ஜட்டோ வெறும் 16 மில்லியன் அமெரிக்க டாலர்தான். இதில் எனக்குத் துக்கமான விடயம் என்னவெனில் இலங்கையில் இந்தத் திரைப்படம் வெளியாகவில்லை. சரி வெளியாகவில்லை என்று மனதைத் தேற்றிக்கொண்டு இருந்தால், இன்னமும் கடுப்பேத்துவது போல லிபர்ட்டி [...]
300 – திரைவிமர்சனம்
விமர்சனத்தை வாசிக்க முன்னர் மேலே உள்ள ரெயிலரை ஒரு தடவை பாருங்கள். ரெயிலரைப் பார்த்தால் தெரியும் படம் எவ்வளவு அகோரமாகன சண்டைக் காட்சிகள் நிறைந்தது என்பது. ஒரு நாள் ஸ்பாட்டா வீரர்களின் நகருக்கு வரும் பாரசீகச் செய்தித் தூதுவன் ஸ்பாட்டாவைச் சரணடையுமாறு வேண்டுகின்றான். இதனால் ஆத்திரம் கொள்ளும் ஸ்பாட்டா அரசன் செய்திகொண்டு வந்த தூதுவர்களை கொலை செய்வதுடன் யுத்தத்திற்குத் தயாராகின்றான். ஸ்பாட்டாக்கள் என்பவர்கள் பிறவியிலேயே வீரர்கள், யுத்தத்திற்காகப் பயிற்றுவிக்கப்ட்டவர்கள். இரக்கம், மரணம் பற்றியெல்லாம் அக்கறைப்படாதவர்கள். [...]
த லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லான்ட் – விமர்சனம்
அண்மையில் பார்த்து தலை விறைத்த படம் என்றால் அது த லாஸ்ட் கிங் ஒஃப் ஸ்கொட்லான்ட் என்ற படமே. கதை பிருத்தானியாவில் ஆரம்பித்தாலும் சடுதியாகத் திரும்பி ஆபிரிக்காக் கண்டத்தின் பக்கம் சென்றுவிடுகின்றது.ஸ்கொட்லாந்தின் ஒரு மருத்துவப் பட்டதாரி பட்டம் பெற்றுக் கூத்தடிப்பதுடன் கதை ஆரம்பமாகின்றது. பின்னர் அவர் சேவை நோக்கில் மற்றும் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள உகண்டா செல்கின்றார். இவர் உகண்டாவில் கால் பதிக்கும் நேரம் பார்த்து அங்கே ஒரு இராணுவப் புரட்சி ஏற்படுகின்றது. அந்த இராணுவப் புரட்சியாளர் [...]
சக்கை போடும் Spiderman 3
அண்மையில் உலகமெங்கும் வெளியாகிய ஸ்பைடர்மான் திரைபப்படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இதுவரை Dead Man’s Chest திரைப்பபடமே வெளியான முதல் நாளில் அதிகளவு வசூலை எடுத்தது, ஆயினும் இப்போது ஸ்பைடமான் அதை முறியடித்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் அதிகளவு பாத்திரங்கள் பயன்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இரசிகர்கள் எதையும் சகிக்கத் தயாராக உள்ளமை வெளிப்படையானது!!! இந்தத் திரைப்படத்திலும் வழமைபோல காதல், அதனால் ஏற்படும் குளப்பம் எல்லாமே உண்டாம். அத்துடன் ஒன்றுக்கு இரண்டாக வில்லன்கள் உண்டாம்…. பார்ப்போம் எப்ப இலங்கையில் வெளியாகுது என்று!!!! [...]
23 : The Departed – விமர்சனம்.
டூம், போக்கிரி போன்ற சாதாரண இந்திய பொலீஸ், திருடன் திரைப்படங்களைப் பார்த்து புளித்துப் போனவர்கள் மாற்றாக இந்தத் திரைப்படம் த டிப்பார்ட்டட் ஐப் பார்க்கலாம். நான்கு ஒஸ்கார் விருதுகளைத் தட்டிய திரைப்படம் என்பதால் சுவாரசியத்துக்கு குறைவிருக்கும் என்று சந்தேகப் படத்தேவையில்லை. ஆஸ்காரிற்கு அப்பால் சுமார் 40 விருதுகளை இந்தத் திரைப்படம் அள்ளியுள்ளது. உண்மையில் இந்தத் திரைப்படம் ஒரு ஹாங் ஹாங் திரைப்படத்தின் (WuJianDao – Internal Affair) மீளாக்கமாகும். ஆயினும் அத் திரைப்படத்தை விட இது சிறப்பாக [...]