லைசன்ஸ் டு வெட்!!!
நேற்று மாலை மிகவும் அலுப்படிக்கவே அருகில் இருந்த டி.வி.டி கடைக்குச்சென்று எடுத்துப் பார்த்த படமே லைசன்ஸ் டு வெட். ஒரு திருமணக் காட்சியைக் காட்டுவதுடன் திரைக்கதை ஆரம்பிக்கின்றது. ஒரு பாதிரியார் காதலின் அத்தியாயங்களை விபரிப்பதுடன் ஏன் திருமணங்கள் பிசகுகின்றன என்றும் கூறுகின்றார். பின்னர் ஒரு ஜோடி எவ்வாறு சந்திக்கின்றது. அவர்கள் எவ்வாறு காதலில் வீழ்கின்றார்கள், எவ்வாறு அந்தப் பையன் அந்தப் பெண்ணிடம் தன்னைத் திருமணம் முடிக்குமாறு வேண்டுகின்றான் என்பதைக் காட்டுகின்றார்கள். பெண்ணின் வேண்டுகோளின் படி அவர்கள் ஊரில் [...]
ஜீமெயில் பற்றி ஒரு பொம்மலாட்டம்
நீங்கள் ஏன் ஜீமெயிலைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஐந்து காரணங்களுடன் கூகள் களமிறங்கியுள்ளது. எப்போதும் புதுமை படைக்கும் கூகள் இம்முறை பொம்மலாட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளது. கீழே இணைக்கப்பட்ட வீடியோ கூகள் நிறுவனத்தில் பொம்மலாட்டம். பொம்மலாட்ட முடிவில் ஜீமெயில் கணக்கு ஒன்றை ஆரம்பியுங்கள் என்று உருக்கமாக வேண்டுகின்றார்கள். . இப்போது நீங்கள் ஜீமெயில் கணக்கை ஆரம்பிக்க முன்னர் போன்று யாராவது வரவேற்பு அனுப்பத் தேவையில்லை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். எரிதங்களைத் தடுத்துவிடுகின்றது, இலகுவாக உங்களை ஒழுங்கமைக்க [...]
68 : என்னருமைக் காதலி கணனி
அண்மையில் ஆதவா ஒரு கட்டுரையில் தானும் கணனி விளையாட்டுகளும் எப்படி ஒன்றுடன் ஒன்று பின்னிப பிணைந்து இருந்தோம் என்று எழுதி இருந்தார். அதை வாசித்ததும் நானும் எனது கணனி அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது. இந்த எண்ணத்திற்கு வித்திட்ட ஆதவனிற்கு நன்றிகள். நான் முதன் முதலாகக் கணனியைக் கண்டது 1993 ல் அதாவது அப்போது ஆண்டு ஐந்து படித்துக்கொண்டு இருந்தேன். நான் இடைவேளை நேரத்தில் அடிக்கடி செல்வது கணனி அறை யன்னலோரம். [...]