Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்
ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை [...]
Twitter துணை நாடும் குமுதம்.காம்
உலகின் பிரபல செய்திநிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் ஏன் எங்கள் கூகிள் என்று பலரும் தமது வியாபாரத்தை விரிவாக்கும் ஒரு கருவியாக ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். இந்த வழியே இப்போது தமிழ் சஞ்சிகையான குமுதமும் இணைந்துள்ளது. குமுதம் ட்விட்டர் பக்கம் சென்று பார்த்தால் ட்விட்டுகள் அப்படியே தானாகவே இயற்படுத்தப் படுகின்றது. நீங்களும் குமுதம்.காம் ஐப் பின்தொடரலாம். பி.கு: குமுதம்.காம் தள உள்ளடக்கங்களைப் பார்ப்பதற்கு நீங்கள் சந்தா செலுத்த வேண்டும். ட்விட்டர் தகவல்களை இப்போதைக்கு இலவசமாகத்தான் தருகின்றார்கள்.