கூகிள் டொக்ஸ் தமிழி்ல்
கூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை! இதன் தமிழ் மொழி சொற் பிழை திருத்தி படுபயங்கரமாக வேலைசெய்கின்றது. இதை நம்பி யாராவது தமிழில் எழுதப் போனால் தமிழ் தாய் தற்கொலை செய்துவிடுவாள். இந்த சேவையை தமிழில் பெற
அட்சென்ஸ் & தமிழ் மொழி
இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன. இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு.
IE 8 வேண்டாம் Firefox beta 3 போதும்
இன்று கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் பதிவை இடும் போது ஒரு விடையத்தைக் கவனித்தேன். அதாவது Firefox தமிழ் முகவரிகளை அழகாகக் காட்டுகின்றது. கீழே இணைக்கப்பட்ட படங்களைப் பாருங்கள். IE 8 Firefox beta 3 விக்கீப்பீடியாப் பக்கங்களையும் சென்று பார்த்தேன் அழகாக காட்டுகின்றார். அச்சா குட்டி! இப்போ மைக்ரோசாப்ட் அண்ணாச்சி என்ன சொல்கிறாராம்!!! Firefox 3 Beta 3 பதிவிறக்குக
பாமினியிலிருந்து தமிழ் 99 நோக்கி
2008 ல் செய்ய வேண்டிய வேலைகளுள் ஒன்றாக, பாமினி முறையில் இருந்து தமிழ் 99 முறைக்கு மாறுவது என்று முடிவு செய்தேன். மாற நினைத்ததற்கு முதல் காரணம், அனைத்திற்கும் தமிழில் ஒரு நியமமான முறை இருக்க வேண்டும் என்று நினைத்ததுதான். ஒன்று பட்டால்தான் உண்டு வாழ்வு, இல்லாவிட்டால் வீழ்வுதான். அதைவிட தமிழைத்த தமிழாய் தட்டச்சிட வேண்டும் என்பதும்தான். இம் முயற்சியில் ஈடுபட ரவியின் பல கட்டுரைகளும், தமிழ்99.org என்ற தளமும் உந்துதலாக இருந்தன. ஆரம்பத்தில் தமிங்கிலீஸ் முறையில் [...]
பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் எழுதும் வசதி
இப்போது பிளாக்கரில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். முன்பு ஹிந்திக்கு மட்டுமே வழங்கப்பட்ட சேவை தமிழுக்கும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. படி 1 படி 2 படி 3 படி 4 கூகிள் தமிழ் எழுதியைப் பயன்படுத்தாதீர் என்கிறார் ரவி!!!! அதையும் பார்த்திடு்ங்களேன்!
தமிழ் மொழி பெயர்ப்பான் விரைவில்???
கூகிள் நிறுவனத்தின் மொழிபெயர்ப்பு சேவையை நீங்கள் பல தடவை பயன்படுத்தியிருப்பீர்கள். இதன் முக்கியமான விடையம் என்னவெனில் அங்கு ஆங்கிலத்தில் உள்ளிட்டு சீனம், பிரஞ்சு, அரபி போன்ற மொழிகளில் தேடலாம். தமிழ், ஹி்ந்தி சேவை வழங்கப்படலாம் என்று ஒரு செய்திக் குறிப்பு சொல்கின்றது. அவ்வாறு நடந்தால் பின்வருமாறு நாம் தேடலாம். உ+ம்: how to make a cup of tea? என்று தேட அது “எப்படி ஒரு கோப்பை தேனீர் தயாரிப்பது?” என்று தேடித்தரும். இந்த தளத்திற்குச் [...]
தமிழ் வேர்ட்பிரஸ் வந்தார்
தமிழ் கூறும் நல்லுலகம் இறுதியாக ஒன்றிணைந்து ஒரு நல்ல நிகழ்வினை நடத்தி முடித்துள்ளது. தமிழில் வேர்ட்பிரஸ் இடைமுகம் வழங்கப்பட்டுவிட்டது. அங்கங்கே பிழைகள், ஒரு சொல்லுக்கு வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டமை போன்ற பிரைச்சனைகள் உள்ளன. ஆயினும் எமது கூட்டுமுயற்சியின் வீரியத்தின் முன்னால் இவையனைத்தும் எதுவமேயல்ல. அடுத்த பதிப்பில் இந்தக் குறைகளையும் களைய வேண்டும். எத்தனையே தடவை முக்கி முக்கி வேண்டியபோதும் பிளாக்கருக்கு தமிழ் இடைமுகம் வழங்காமல் பிகுபண்ணும் கூகுகிள் இதைப் பார்த்தாவது இடைமுகம் வழங்கட்டும். http://ta.wordpress.com என்ற [...]
2007 முடிவுக்குள் wordpressஐத் தமிழாக்குவோம்
கடந்த ஒரு வாரத்தில் 700 சரங்களைத் தமிழாக்கி உள்ளேன். இன்னும் 2200 சரங்கள் உள்ளன. அண்மையில் மயூரேசனும் களத்தில் குதித்து இருக்கிறார் தமிழ்ப்பதிவுலகம், தமிழ்ப்பதிவுலகம் என்று நிறைய பேசிக் கொண்டே இருக்கிறோம்..ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் குறைவு தான்..இதைத் தமிழாக்கி முடிப்பது உருப்படியான ஒரு பணியாக இருக்கும்..தமிழ் மட்டும் அறிந்த பல தமிழர்களை வலைப்பதிய வைக்கும்..அதுவும் இல்லாமல் நம் பண்பாட்டுக்கு ஏற்ற சொல்லாடல் உள்ள இடைமுகப்பப்பை உருவாக்குவது இனிமையாக இருக்கும் தானே.. எப்படி செய்வது? http://translate.wordpress.com/ சென்று பயனர் [...]
ஹிந்தி போல தமிழுக்கும் transliteration சேவை கூகிளால் அறிமுகம்
இது வரைகாலமும் ஹிந்தி மொழிக்கு மட்டுமே இந்த சேவை கூகிளினால் வழங்கப்பட்டுக்கொண்டு இருந்தது. இப்போது தமிழ் உட்பட மேலும் சில மொழிகளுக்கு இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஓர்குட், ஜிமெயில், பிளாக்கர் போன்ற சேவைகளில் இது உள்ளடக்கப்பட்டால் இ-கலப்பை இல்லாமல் தட்டச்சு செய்யலாம். ஆனால் இது பொனட்டிக் முறையே!!! Tamil : http://www.google.com/transliterate/indic/Tamil Telugu : http://www.google.com/transliterate/indic/Telugu Kannada : http://www.google.com/transliterate/indic/Kannada Malayalam : http://www.google.com/transliterate/indic/Malayalam இது இயங்க நீங்கள் இணையத்துடன் இணைந்திருக்க வேண்டும். அத்துடன் சில [...]
ஆர்கூட் தமிழில்
இன்று ரவியிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் ஆர்கூட்டுக்கு தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி இருந்தது…!!! ஜிமெயிலுக்கே இன்னமும் தமிழ் இடைமுகம் வழங்கப்படாத நிலையில் எவ்வாறு ஆர்கூட்டுக்கு வழங்கினார்கள் என்று சென்று பார்த்தேன்… அட சத்தியமாத்தாங்க.. தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டுள்ளது!!!! Settings -> Display Lanugauge: தமிழ் என்பதைத் தெரிவு செய்தால் சரி. தமிழ் இடைமுகம் கிடைத்துவிடும். மொழிபெயர்பில் சில குறைகள் உள்ளதை மறுக்க முடியாது. ஆயினும் கூகுளுக்கு இந்தளவில் மனம் வந்ததே பெரிய விடயம். [...]