தமிழிஷ் இப்போது விரைவாகப் பிரபலமாகிவருகின்றது. பலரும் இதனை விரும்பி பாவிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் வலைப்பதிவுகள் தவிர பல்வேறு தளங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருப்பதே.
இந்த தமிழிஷ் (Tamilish)ஐ எப்படி வலைப்பதிவுகளில் இணைப்பது என்பது பற்றி அவர்கள் தமது தளத்தில் விளக்கியுள்ளார்கள். ஆயினும் இந்த முறையில் சொந்த வழங்கியில் வலைப்பதிவு வைத்திருப்பவர்களின் பதிவுகள் வேலைசெய்யாது.
அதேபோல பழைய வார்ப்புருக்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் இந்த முறை பயன்படாது. எனது ஹாலிவூட் பார்வை தளத்தை எனது டொமைனில் ஏற்றிய பிறகு தமிழிஷ் வாக்கு எண்ணிக்கையைக் காட்டவில்லை. பின்னர் அவர்கள் தந்த கோடை பின்வருமாறு மாற்றியதும் ஜோராக வேலைசெய்யத்தொடங்கியது.
<script type=’text/javascript’>
button=”vert”;
submit_url =”<$BlogItemUrl$>”
</script>
<script src=’http://www.tamilish.com/tools/voteb.php’ type=’text/javascript’></script>
உ+ம் : Underworld: Rise of the Lycans (2009) எனும் பதிவு அதிகமாக 13 வாக்குகளைப் பெற்றது அதை இப்போது எனது தளம் காட்டுவதைக் காணலாம்.
பி.கு : வேர்ட்பிரசில் எவ்வாறு தமிழிஷ் குத்துப்பட்டையை நிறுவுவது என்பது பற்றி சயந்தன் எழுதியுள்ளார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!



Self Hosted பிளாக்கர் வலைப்பதிவுகளில் தமிழிஷை இணைத்தல்…
சொந்த வழங்கிகளில் பிளாக்கர் இருப்பின் எப்படி தமிழிஷை உங்கள் பிளாக்கரில் இணைப்பது….
Hi why ,cannot see you for loong 2 months online ? any problem in your country for you ?
மணிமாறா அவர்களே நான் நலம். உங்கள் அன்புக்கு நன்றி. வேலை காரணமாக நேரப்பற்றாக்குறை அதுவே ஒரே ஒரு பிரைச்சனை.