YouTube ஐயும் நீக்கிய அப்பிள்
iOS6 இன் மென்பொருள் வல்லுனருக்கான சிறப்பு முன்னோட்ட பதிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. நீங்கள் ஒரு அப்பிள் மென்பொருள் வல்லுனராக இருந்தால் நீங்களும் இந்தப் பதிப்புக்களைப் பெற்று இருப்பீர்கள். இவ்வாறு அண்மையில் வெளிவந்து iOS6 பீட்டா பதிப்பில் யூடியூப் (YouTube) செயலி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே போன்று அப்பிள் கூகிள் மப்ஸ் செயலியை நீக்கி அப்பிள் மப்ஸ் செயலியை நிறுவியமையைக் குறிப்பிட்டு இருந்தேன். இப்போது யூடியூப் செயலியும் அப்பிளின் டெஸ்க் டொப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தீராமல் [...]
கூகிளின் புதிய படைப்புகள்
மைக்ரோசாப்ட் அப்பிளைத் தொடர்ந்து இந்த வருடம் கூகிளினது 5ம் கூகிள் ஐ/ஓ (Google I/O) நடைபெறத் தொடங்கயுள்ளது. நேற்றைய பிரதான உரையின் போது கூகிளின் புதிய படைப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டது. வழமைபோல இம்முறையும் அன்ரொயிட்டின் சாதனைகளை கூறியே கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் நடந்த கருத்தரங்கில் சுமார் 100 மில்லியன் அன்ரொயிட் கருவிகள் பாவனையில் உள்ளதாக அறிவித்தது கூகிள். இம்முறை இந்த எண்ணிக்கை 400 மில்லியனாக அதிகரித்து விட்டதாகவும் அறியத்தருகின்றது. அத்துடன் ஒரு நாளைக்கு 1 மில்லியன் [...]
மைக்ரோசாப்ட் சேர்பஸ் – டாப்லட்
ஐபாட், அன்ரொயிட் டபிளட் அணிவகுப்பில் இப்போது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் சேர்பஸ் (Surface) எனப்படும் டபிளட் கணனியும் இணைந்துள்ளது. விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த டாப்ளெட் Intel மற்றும் ARM சிப்புகளினால் உயிரூட்டப் பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இன்டலையோ அல்லது ஏ.ஆர்.ம் சிப்பையோ தெரிவு செய்து கொள்ளலாம். இந்த டாப்லட்டின் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் மென்பொருள் வன்பொருள் இரண்டையும் மைக்ரோசாப்ட் நிறுவனமே தயாரித்திருக்கின்றமை. இதற்கான காரணமாக தாம் மென்பொருளில் அறிமுகப்படுத்தும் வினைத்திறன் மிக்க செயற்பாடுகளுக்கு ஏற்ற வன்பொருளை [...]
iOS6 இல் இருந்து நீக்கப்பட்ட Google Maps
பலராலும் போற்றப்படும் இரண்டு கைதொலைபேசி இயங்கு தளத்தின் உரிமையாளர்கள் கூகிள் மற்றும் அப்பிளாகும். அன்ரொயிட் இயங்குதளம் வெளியிடப்பட முன்னர் நண்பர்களாக இருந்த அப்பிளும் கூகிளும் இன்று ஒருத்தருடன் ஒருத்தர் முட்டி மோதும் நிகழ்வு நடந்தேறி வருகின்றது. அப்பிளின் நெருங்கிய நண்பன் இடத்தில் இருந்த கூகிள் மெல்ல மெல்ல விலக அந்த இடத்தில் இப்போது பேஸ்புக் மெல்ல மெல்ல அடியெடுத்து நுழைவதைக் காணலாம். முதலாவது அப்பிள் ஐபோன் தொலைபேசி வெளியிடும் போது அப்பிள் கூகிள் நிலமை சுமூகமாக இருந்தது. [...]
கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்
ஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார். ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன? பொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் [...]
இலங்கையில் 3டி சினிமா
சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை. இந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் [...]
அன்ரொயிடும் தமிழ் மொழியும்
அப்பிள் நிறுவனம் ஐபோன் மூலம் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கூகிள் அன்ரொயிட் மென்பொருளை வெளியிட்டது. உடனே கடுப்பாகிப் போனார் ஸ்டீவி ஜொப்ஸ். கூகிள் தமது பிரதான உற்பத்திப் பொருளைக் குறி வைப்பதாகக் கூறி கூச்சலிட்டார். கூகிள் நடத்துனர் சபையிலிருந்தும் வெளியேறினார். கூகிள் அப்பிள் மைக்ரோசாப்டிற்கு எதிராக செயற்பட்ட காலம் போய் கூகிளும் அப்பிளும் மோதத் தொடங்கியது இந்த நிகழ்வின் பின்னர்தான். மற்றைய பல கைபேசி இயங்கு தளங்கள் போல அன்ரொயிட்டிற்கு இது வரை இயல்பிருப்பான [...]
உபுண்டு 10.4 இல் தமிழில் தட்டச்சிடல்
முன்பு ஒரு பதிவில் உபுண்டு 9.04 இல் தமிழ் 99 இல் தட்டச்சிடும் வசதி பற்றி எழுதியிருந்தேன். அதில் ஸ்கிம் எனும் ஒரு மென்பொருளை நிறுவி அதன் மூலம் தமிழில் தட்டச்சிடும் வசதி பற்றி எழுதியிருந்தேன். இந்த முறை எந்தவொரு மேலதிகப் பொதியையும் நிறுவாமால் 10.4 பதிப்பில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்று எழுதுகின்றேன். முதலில் System => Preference => iBus Preference என்று நகர்ந்து கொள்ளுங்கள் Input Method எனும் தாவலைத் தெரிவுசெய்துகொள்ளுங்கள் கிடைக்கும் [...]
இலங்கையில் ஜப்பானியத் தாக்குதல்
உலக யுத்தம் இரண்டு உலகையே உலுக்கிப் போட்ட ஒரு யுத்தம். சுமார் 60 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்த யுத்தம் அது. அறுபது மில்லியன் எனப்படும் கணக்கு மிகப் பெரியது. அதாவது உலகத் தமிழர்களின் மொத்த எண்ணிக்கை. அல்லது இலங்கை மக்கள் தொகையின் மூன்று மடங்கு ஆகும். உலக யுத்ததில் இலங்கையில் நடந்த சில சம்பவங்களைப் பார்க்க முன்னர், உலக யுத்தம் II இல் நடந்தது என்ன என்று பார்ப்போம். மேற்கில் நாடு பிடிக்கும் ஆர்வத்துடனும் முதலாம் [...]
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2010
ஒவ்வொரு வருடமும் கொழும்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதுண்டு. இம்முறையும் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது. செப்தெம்பர் 18 தொடக்கம் 26 வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்று ஏதாவது ஒரு ஆங்கிலப்புத்தகத்தை வாக்கிவரும் எனக்கு இம்முறை பெருமளவில் தமிழ் புத்தகங்களை வாங்க கிடைத்தமை பெரும் சந்தோசம். https://www.nhm.in/ தளத்தில் விற்பனைக்கு இருக்கும் பல புத்தகங்களை பார்த்து பல நாட்களாகக் கொட்டாவி விட்டாலும் இன்னமும் அந்தப் புத்தகங்களை இலங்கையில் [...]