பணம் தரும் வலைப்பதிவு
பலரும் பல பதிவுகளில் பிரித்து மேய்ந்த தகவல் என்றாலும் நானும் என்பாட்டிற்கு இணையத்தில் பணம் செய்தல் பற்றிய ஒரு தொடரை எழுத இருக்கின்றேன். முதலாவது பாகம் வலைப்பதிவருக்கானது. வலைப்பதிவில் விளம்பரம் காட்டல் சம்பந்தமானது.
பலரும் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, வலைப்பதிவில் பணம் செய்ய முடியுமா? ஆம் நிச்சயமாக முடியும். இதை இலகுவில் யாரும் நம்பத் தயார் இல்லை. டேய்.. அவனுகள் ஏமாத்திப் போடுவாங்களடா. உன்னட்டை ஆதாரம் இருக்கா? இப்படிப் பல கேள்விகளால் கணை தொடுப்பர். [...]
காதலிக்க நேரம் இல்லை எனும் தொடரை நீங்கள் விஜய் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம். வழமை போல இந்த தொலைக்காட்சித் தொடரை நான் பார்பதில்லை. ஆனாலும் பலர் இதை விரும்பிப் பார்த்ததைக் கண்டிருக்கின்றேன். ஆனாலும் இப்போது ஒரு முக்கியமான பாத்திரமான நாயகனைக் கொலைசெய்துவிட்டார்களாம். அதனால் தொடர் டோடல் பிளாப் ஆகிவிட்டது.
இந்த தொடரின் இரசிகர்கள் பெண்களாக இருக்கின்ற நேரத்தில் நாயகனை கொலை செய்வது என்பது முட்டாள் தனம்தானே???
இந்த தொடரின் தொடக்கத்தில் வரும் பாடல் மிக அழகானது. பல தடவை மீண்டும் மீண்டும் கேட்டாலும் [...]
இயற்கையை ஆராதித்து மடோனா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார். இந்தப் பாடலில் ஒரிஜினல் கொப்பியை உங்களுக்காக MSN வழங்குகின்றது. ஒவ்வொரு பயனர் பாடலைப் பதிவிறக்கும் போதும் அதற்கு .25 பணத்தை அந்த நிதியத்துக்காக MSN வழங்கப் போகின்றதாம்..
அடுத்து லண்டனில் நடக்க இருக்கும் லைவ் ஏர்த் என்ற கொன்சேர்ட்டில் மடோனா இந்தப் பாடலை நேரடியாகப் பாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது…
ஆகவே சுட்டியைச் சுட்டி தளத்திற்கு சென்று [...]
அண்மையில் உலகமெங்கும் வெளியாகிய ஸ்பைடர்மான் திரைபப்படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது. இதுவரை Dead Man’s Chest திரைப்பபடமே வெளியான முதல் நாளில் அதிகளவு வசூலை எடுத்தது, ஆயினும் இப்போது ஸ்பைடமான் அதை முறியடித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் அதிகளவு பாத்திரங்கள் பயன்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இரசிகர்கள் எதையும் சகிக்கத் தயாராக உள்ளமை வெளிப்படையானது!!!
இந்தத் திரைப்படத்திலும் வழமைபோல காதல், அதனால் ஏற்படும் குளப்பம் எல்லாமே உண்டாம். அத்துடன் ஒன்றுக்கு இரண்டாக வில்லன்கள் உண்டாம்….
பார்ப்போம் எப்ப இலங்கையில் வெளியாகுது என்று!!!! அப்படி வெளியாகாவிட்டால் என்ன இருக்கவே [...]
ஆஸ்கார் விருதுகளின் முழுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் த டிபாட்டட் (The Departed) எனும் படம் சிறந்து படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. த டிப்பார்ட்டன் திரைப்படம் நான்கு ஆஸ்கார் விருதுகளை அள்ளியுள்ளது.
வேற்று மொழிக்கான சிறந்த திரைப்பட விருதை ஜேர்மானிய திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.அடுத்த பதிவில் விரிவான தகவல்களைத் தருகின்றேன்.
மேலதிக தகவல் [...]
பெப்ரவாரி 24 ம் திகதி ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதில் சிறந்த நடிகருக்கான பரிந்துரையில் இரண்டு கறுப்பின நடிகர்களின் பெயர் (Will smith, Forest) பரிந்துரைக்கப்பட்டுள்ளமை சிறப்பான விடையமாகும்.
மேலும் Babel, The Departed, Letters from Iwo Jima, Little Miss Sunshine, The Queen ஆகிய படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. லயர்னாடோ டிக்காப் ப்ரியோ நடித்த படம் The Departed பரிந்துரைக்கப் பட்டுள்ளதுடன் அவரும் சிறந்த நடிகர் பிரிவில பரிந்துரைக்கப் பட்டுள்ளார்.
வேற்று நாட்டுப் [...]
அண்மையில் அமெரிக்காவின் பிரபல ஆங்கிலப் பாடகி பிரட்னி ஸ்பியர்ஸ் தலை முடியை வெட்டி மொட்டையாகத் திரிந்தது யாவரும் அறிந்ததே. இப்போது வெட்டப்பட்ட தலைமுடியை ஏலத்தில் விட உள்ளார்கள்.
சரி உங்களுக்கும் என்ன வாங்கலாம் போல உள்ளதா? அப்போ வாங்கலாம் போல உள்ளதா விலையைக் கேளுங்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்.
ஒரு வெப்தளத்திலேயே ஏலம் இட்டுள்ளனர். அதில் இது வாழ்க்கையில் பெரிய சந்தர்ப்பம் என்று கூறியுள்ளனரப்பா!!!
தளத்தைச் சென்று [...]
சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்த்த அனிமேசன் திரைப்படம்தான் ஷிரேக் (Shrek). ஏற்கனவே இரண்டு பாகங்கள் வெளி வந்துள்ள வேளையில் இப்போது ஷிரெக் மூன்றாம் பாகமும் (Shrek the Third) வெளிவர உள்ளது.
18 ம் திகதி மே மாதம் இந்தத் திரைப்படம் வெளியிடப் பட உள்ளது. இங்கு fபியோனாவின் அப்பாவான அரசர் நோய்வாய்ப் படுகின்றார். இதனால் ஷிரெக் அரசருக்கு அடுத்த வாரிசைக் கண்டு பிடிக்க வேண்டும் அல்லது அவர் புதிய அரசனாக வேண்டும். இவ்வேளையில் வில்லன் [...]
ஹரி போட்டர் திரைப்படத்தில் ஹரியின் வேடத்தில் நடித்த Daniel Radcliffe தான் ஹரி போட்டர் கடைசிப் புத்தகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தன் பாத்திரம் இந்தப் பாகத்துடன் கொல்லப்படும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இதே வேளை ராவ்லிங் Harry Potter and the Deathly Hallows என்ற புத்தகத்தை எழுதி முடித்துள்ளதும் இது ஜூலை 21 வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ராட்கிளிஃப் இது வரை வெளிவந்த நான்கு ஹரி போட்டர் படங்களில் நடித்துள்ளதுடன் அடுத்து வரும் 3 படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். [...]
எனது முன்னய ஒரு பதிவில் பிளாக்கர் பீட்டாவினால் என் வலைப்பதிவை இழந்ததையும் புதிய பிளாக்கர் கணக்கை ஆரம்பித்ததைதப் பற்றியும் எழுதினேன்.
இன்று காலை நான் மீண்டும் பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறினேன். பிரைச்சனை இல்லாமல் புதிய பிளாக்கருக்கு மாறியது. இதற்கு சுமார் மூன்று நிமிடங்கள் வரையே எடுத்தது.
முன்னெச்சரிக்கையாக நான் என் டெம்பிளேட்டை ஒரு கொப்பி எடுத்து வைத்திருந்தேன் ஆகவே புதிய பிளாக்கருக்கு மாறிய பின்னர் அதை மீளப் போட்டுக்கொண்டேன். ஏனெனில் இவ்வாறு மாறும் போது டெம்பிளேட்டில் இருந்த [...]