பெட்டகம்

When Life Gives You Lemons, Make Limoncello – புத்தக விமர்சனம்

ஆங்கிலத்தில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு “When life gives you lemons, make lemonade”. இத்தாலியில் இந்த லெமனேட்டை விட Limoncello எனும் குடிபானம் பிரபலமாம். அத்துடன் Limoncello செய்ய லெமன் தோலைப் பயன்படுத்துகின்றார்கள். ஆகவே ஆசிரியர் இந்தப் பெயரை சூட்டியுள்ளார் தன் முதலாவது புத்தகத்திற்கு.

முதலில் ஒரு விடயம். ஒரு சீரியசான புத்தகம் தேடி நீங்கள் அலைபவர் என்றால் இத்துடனே இந்த விமர்சனத்தை வாசிக்காமல் வெளியேறலாம். ஏன் எனில் இந்தப் புத்தகம் ஒரு ஆங்கில ஆசரியரின் வாழ்க்கையில் [...]

நினைவுகள் – வீதியோட்டம்

பல்கலையில் படிக்கும் போது நடந்த நிகழ்வு. ஒரு மீள் பதிவு.

அன்று மாலை ஜிம் கன்டீனீல் ஒய்யாரமான இருந்து இலங்கை இங்கிலாந்து கிரிக்கட் மாச் பார்த்துக்கொண்டு இருந்த போது யாரோ பின்னால் தோளில் கை போட்டார்கள்.

“நாளைக்கு ரோட் ரேஸ் ஓடப் போறம் வாறீங்களா?” ஜெஹான் ஐயா (அண்ணா) கேட்டார்.

“அதெல்லாம் பள்ளிக்கூடத்தில ஓடினதோட சரி… ஐயோ ஏலாது ஐயே”

“கமோன் மயூ… வன் லாஸ்ட் டைம்” தற்போது கேட்டது அயோமி. இதற்குப் பிறகு மறுக்க நான் என்ன முட்டாளா?

“ஓ.கே ஐம் [...]

அழகே காதலே கடவுள் பணம் தருவாரா?

முன்னுரை முதிய உரையொன்றும் இல்லாமல் நேரடியாகப் பதிவிற்கு குதிக்கின்றேன்.

அழகு

ம்… பலபேரும் அழகென்றால் வெளி அழகல்ல, உள் மனதில் அழகே முக்கியம் என்பர். சிலரோ அகத்தின் அழகு முகத்தில் தெரியும் ஆகவே அகம் அழகாக இருந்தால முகம் அழகாக இருக்கும் என்று சொல்லுவர். இப்படி சொல்லுபவர்களை எங்கேயாவது கண்டால் நங்கு நங்கு என்று இரண்டு குத்துப் போட மறக்கவேண்டாம். உலகம் எப்போதும் (99 வீதம்) அழகென்று கணிப்பது வெளியழகைத்தான். இப்போதெல்லாம் பொடியள் பெண் தேடும் அம்மாவிடம் தனது மனைவி எப்படி [...]

ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்


திருமணம் என்பது ஒரு அழகான நிகழ்வு. முன்னோர்கள் சொன்னபடி சொர்க்கத்திலே நிச்சயிக்கப்படுகின்றது. ஆனால் இன்றய பல திருமணங்கள் அரைவாசியில் ஃபாஸ்ட் ஃபூட் உணவுமாதிரி உடனடியாக உருவாகி உடனடியாக முடிவடைந்துவிடுகின்றன. Continue reading ஆண் பெண் உளவியல் வேறுபாடுகள்

இலங்கை பதிவர் சந்திப்பு – 2009

பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.

இந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.

பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே பயன்படுத்துவது [...]

என் விருப்ப ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்கள்

ஆங்கில தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் பழக்கம் எம்மில் பலருக்கும் உண்டு. உதாரணமாக சிறு வயதில் நைட் ரைடர், ரொபின் ஓப் ஷேர்வூட், டார்ஸான் போன்ற தொடர்களை எம்மில் பலர் பார்த்திருக்கின்றோம். சினிமாவிற்கு சமனான செலவு, தரத்துடன் ஆங்கிலத் தொலைக்காட்சித் தொர்களை எடுப்பது அவர்களின் சிறப்பு. துரதிஷ்ட வசமாக எங்கள் தமிழ் தொலைக்காட்சிகள் யாவும் ஒரு ஒப்பாரி வைக்கும் பெண்ணையும் அவரைச்சுற்றிய ஆண்களையும் பற்றியதாக அமைந்துவிட்டது. இன்னுமொரு நூற்றாண்டுக்கு அவை மாறப்போவதில்லை. அவற்றை மாற்றச்சொல்லிக் கேட்டு தாய்குலத்தில் சாபத்திற்கு ஆளாக [...]

ஓர்கூட் கொள்கை கொடுமை

ஓர்குட்டில் ஒருத்தர் என்பெயரையும் ஒரு புகைப்படத்தையும் தவறாகப் பயன்படுத்தியிருந்தார். இது பற்றி ஆர்கூட்டுக்கு நான் அறிவித்திருந்தேன். அது பற்றி ஓர்கூட் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதைப்பற்றி கிட்டத்தட்ட இப்ப நான் மறந்தே விட்ட நிலையில் ஓர்கூட்டிடம் இருந்து ஒரு மெயில்.

ஹாய் Mayu,

orkut இல் முறைகேடு என்று “2007-10-02″ தேதியில் புகார் அளித்ததற்கு நன்றி.

எங்கள் மதிப்பாய்வு மற்றும் orkut சேவை விதிமுறைகளை பரிசீலித்து பார்த்த பின், இந்த உள்ளடக்கம் தற்போது orkut இல் எந்த கொள்கையையும் மீறவில்லை என்று புரிந்து [...]

ரொபின் ஓஃப் ஷேர்வூட்

ரொபின் கூட் பார்க்காமல் வளர்ந்த குழந்தைகள் என்றால் இலங்கையில் மிக மிக குறைவாகவே இருக்கும். ஒவ்வோரு காலப்பகுதியிலும் பல விதமான ரொபின் கூட் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் வந்தன ஆயினும் இன்றும் என் மனதில் பதிந்து இருப்பது Robin of Sherwood எனும் தொடரே.

இந்த வீடியோவைப் பார்த்த பிறகு ஞாபகம் வருதா???

லொக்ஸ்லி எனும் கிராமத்தை படைகள் வந்து அழிக்கின்றன இதில் இருந்து ரொபினின் தந்தை தன் மகனைக் காப்பாற்றி விட்டு தன் உயிரை நீக்கின்றார். வளர்ந்து வரும் [...]

இலவச SMS அனுப்புதல்

பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள். Continue reading இலவச SMS அனுப்புதல்

தமிழ்ப் பதிவுலகமே… ஒரு நிமிடம்

உலகில் பல பிரைச்சனைகள் இருக்கின்றன. இவற்றில் பல எமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பிரைச்சனைகள். ஆயினும் இல்லாத பிரைச்சனைகளைக் கண்டுபிடித்து, அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகம்.

இப்படியாக ஒருவர் பதிவெழுதுவார், அவருக்கு என்னொருவர் பதில் பதிவு போடுவார். தமிழ் மணத்தில் பர பர என்று சூடுபறக்க இந்த நிகழ்வுகள் நடந்தேறும். இப்படியான் பக்கங்கள் பக்கம் நான் மறந்தும் போவதில்லை, ஆயினும் Google Readerஇல் அவ்வப்போது சில பதிவுகள் கண்களில் தட்டுப்படுவதுண்டு. [...]