பெட்டகம்

தமிழ் மணமும் கடுப்பேத்தும் செய்தித் தளங்களும்

அதிகமாகத் தமிழ் வாசகர்களை இழுக்க வலைப்பதிவுத் திரட்டிகள் ஒரு சிறந்த வழி என்பதை யாம் எல்லாரும் அறிவோம். திரட்டியில் சேர்த்தபின்னர் மொக்கைப் பதிவுகளுக்குக் கூட 100 ஹிட்சுக்கு அதிகமாகச் சம்பாதிக்கலாம்.

இதை நன்கே புரிந்து வைத்திருக்கும் செய்தி தளங்கள் தமிழ் மணத்தை கேவலமாகப் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. செய்தியின் ஒரு வரியைப் போட்டு மீதியை தளத்தில் படிக்கச் சொல்பவர்கள். அதாவது அசின் இன்று பிசினாகிவிட்டார். அவரின் மனேஜர் இது பற்றிக் கூறுகையில்.. என்று வாசிக்கும் போது [...]

தமிழ் மணத்தில் படம் காட்டுவது எப்படி???

தமிழ் மணத்தில் படம் காட்டினால்தான் நல்லா ஹிட்ஸ் எடுக்கலாம் என்று யாரோ ஒரு குருவி முன்னொரு காலத்தில சொல்லிச்சுது. நான் சொல்ல வர்றது அந்தப் படம் இல்லை. அது வேற இது வேற

தமிழ் மணத்தில் உங்கள் பதிவை இணைத்தவுடன் உங்கள் பதிவு முகப்பு பக்கத்தில் தெரியுமல்லவா? அப்போது அதன் அருகே உங்கள் படம் தெரியவில்லையா??? அப்படியானால் எப்படி படம் காட்டுவது என்று கேட்கின்றீர்களா? தொடர்ந்து வாசியுங்கள்.

க்ரவட்டார் எனும் தளத்தில் (இப்போது க்ரவட்டாரை வேர்ட்பிரஸ் வாங்கிவிட்டது) உங்கள் [...]

தமிழ்ப் பதிவுலகமே… ஒரு நிமிடம்

உலகில் பல பிரைச்சனைகள் இருக்கின்றன. இவற்றில் பல எமக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லாத பிரைச்சனைகள். ஆயினும் இல்லாத பிரைச்சனைகளைக் கண்டுபிடித்து, அதை தலைமேல் தூக்கி ஆடி மற்றவர்களையும் வம்புக்கு இழுப்பதே இன்றய தமிழ் வலைப்பதிவுலகம்.

இப்படியாக ஒருவர் பதிவெழுதுவார், அவருக்கு என்னொருவர் பதில் பதிவு போடுவார். தமிழ் மணத்தில் பர பர என்று சூடுபறக்க இந்த நிகழ்வுகள் நடந்தேறும். இப்படியான் பக்கங்கள் பக்கம் நான் மறந்தும் போவதில்லை, ஆயினும் Google Readerஇல் அவ்வப்போது சில பதிவுகள் கண்களில் தட்டுப்படுவதுண்டு. [...]

அடக் கடவுளே நானுமா???

ஒரு நாள் எனது மின்னஞ்சலுக்கு தமிழ் மணத்தில் இருந்து ஒரு வேண்டுகோள் என்னவோ எதுவோ என்று எடுத்துப் பார்த்த போது என்னை நட்டசத்திரமாக அழைத்திருந்தார்கள். யாருக்குத்தான் நட்சத்திரமாக விருப்பம் இருக்காது. அட சரி நான் நட்சத்திரம் ஆகச் சம்மதம் என்று மறு அஞ்சல் போட்டேன்.

என்னையும் ஒரு நபராக மதித்து நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கும் என் வலைப்பதிவையும் ஒரு பதிவாக மதித்து வாசித்த, வாசிக்கும் நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

வலையில் சிதறிக் கிடந்த சில வலைப்பதிவுகளைப் பார்த்து ஆர்வத்தால் உந்தப் [...]