பெட்டகம்

கூகிள் தளத்திற்கு பிண்ணனி படம் அமைத்தல்

கூகிள்.காம் தளத்தின் பக்கத்திற்கு பிண்ணனிப் படம் போட பல்வேறு நிரல்களும் தளங்களும் இருகின்றன. இப்போது கூகிளே இந்த வசதியை உத்தியோக பூர்வமாக தானே அறிவித்துள்ளது.

படிமுறை மிக இலகுவானது.

http://www.google.com/addphoto என்ற தொடுப்பிற்குச் செல்க
ஒரு படிமத்தைப் பதிவேற்றுக அல்லது இருக்கும் படிமங்களில் ஒன்றைத் தெரிவுசெய்க.

அனைத்தும் சரி. இந்த புதிய பிண்ணனி போடும் வசதி உங்களுக்குப் பிடித்துள்ளது [...]

செல் பேசியில் தமிழ் மொழி

இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு.

பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் வழங்கத் தொடங்கியுள்ளனர். [...]

Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!

1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள்

2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள்

3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!)

4. அப்புறம் என்ன, கலாயுங்க

எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள்.  எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்! [...]

PayPal ஐ தடை செய்த இந்தியா

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.

இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.

இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் பயன்படுத்தப்படும் [...]

Google Buzz பாவிக்கிறீங்களோ???

Google Buzz பற்றி நேற்று மற்றும் இன்று இணையத்தில் பர பரப்பாகப் பேசப் படுகின்றது. அனைவரும் தமக்கும் Google Buzz உயிர்ப்பூட்டப்பட்டுவிட்டது என்று பிதற்றுவதைக் கேட்டிருக்கலாம். ஏன், நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைய முயலும் போது கூகிள் Buzz ஐ உயிர்ப்பூட்டுமாறு ஒரு செய்தி உங்களுக்கும் கிடைத்திருக்கலாம்.

கூகிள் வேவ் பற்றி பயங்கரமாக கூகிள் பிரச்சாரம் செய்தது ஆனால் அது அவ்வளவாகப் பிரபலமடையவில்லை. இம்முறை சிறிய குறுகிய அறிவித்தலுடன் கூகிள் இந்த Buzz சேவையை ஜிமெயிலினுள் அனுமதித்துள்ளது.

கூகிள் Buzz [...]

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

16 வயதே நிரம்பிய Twitter புலி

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து [...]

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்

பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. [...]

Google Wave ஐ இணைத்து ஒரு பதிவு

வணக்கம் நண்பர்களே. கூகிள் வேவை வலைப்பதிவில் இணைத்தால் எப்படி இருக்கும் எனபதற்கான ஒரு முயற்சியிது. நீங்களும் வந்து பங்கெடுங்கள்.

var wave =
new WavePanel(‘https://wave.google.com/wave/’);
wave.setUIConfig(‘white’, ‘black’, ‘Arial’, ’13px’);
wave.loadWave(‘googlewave.com!w+MLdwNDiPK’);
wave.init(document.getElementById(‘wave’));

பி.கு: யாருக்காவது கூகிள்வேவ் அழைப்பிதல் [...]

Google Wave அழைப்பிதழ் ஒன்றை வெல்லுங்கள்

கூகிள் வேவ் பற்றிய பதிவு ஒன்றை எழுதியிருந்தேன். அதில் மற்றவர்களால் அழைக்கப்பட்டால் மட்டுமே கூகிள் வேவ் உள்ளே உங்களால் நுழைய முடியும் என்றும் எழுதியிருந்தேன்.

உங்களுக்கு ஒரு அழைப்பு வேண்டுமா? அப்படியாயான் எனது ஆங்கிலப் பதிவில் [...]

Google Wave ஒரு அறிமுகம்

இன்று அனைவரும் Google Wave பற்றிப் பேசி கொண்டு இருக்கின்றார்கள். 2009 இல் நடந்த கூகிள் ஐ/ஓ வில் இந்த தொடர்பாடல் கருவி அறிமுகப் படுத்தப்பட்டது. பொதுப்படையாகச் சொல்வதானால் கூகிள் வேவ் இணையத்தில் தொடர்பாடல் நடக்கும் விதத்தை மாற்றி அமைக்க போவதாகச் சொல்கின்றார்கள்.

அப்படி என்னதான் இந்த கூகிள் வேவில் இருக்கின்றது என்று நீங்கள் கேட்பது நியாயமானது. பொதுவாக நாங்கள் மின்னஞ்சல் அரட்டை போன்ற தொடர்பாடல் முறைகளைப் பயன்படுத்தும் போது அவை இரண்டு பக்க வழங்கிகளிலும் சேமிக்கப்படும். இப்போது ஒரு [...]