பெட்டகம்

PayPal ஐ தடை செய்த இந்தியா

கடந்த செவ்வாய்க்கிழமை பேபால் தனிப்பட்ட பயனர்களின் பணப் பரிமாற்றம் இடை நிறுத்தபட்டிருந்தது. இதற்கு காரணம் இந்திய சட்டங்களுடன் ஏற்பட்ட ஒரு குழப்பமே என்றும் பேபால் அறிவித்திருந்தமை நாம் அறிந்த விடையமே.

இந்நிலையில் இந்தியாவில் பேபாலை இந்திய மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது. இதற்கு கூறப்பட்ட காரணம் பேபால் இந்திய மத்திய ரிசர்வ் வங்கியில் தன்னைப் பதிந்து கொள்ளவில்லை என்பதே.

இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்யும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றே பேபால். பாதுகாப்பு கூடிய முறை என்பதுடன் பலராலும் பரந்தளவில் [...]

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

16 வயதே நிரம்பிய Twitter புலி

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் [...]

கூகிள் - சீனா பிரைச்சனை தீராப் பிரைச்சனையாகுமா??

இதற்கு முன்னர் கூகிள் மற்றும் சீனா இடையில் ஏற்பட்ட கசப்பு பற்றி இரண்டு பதிவுகள் இட்டேன். இப்போது புதிய தகவல்கள் வந்துள்ளதால் மூன்றாவது பதிவும் தயார். கூகிள் மற்றும் சீன அரசுக்கிடையிலான தகராறு பற்றித் தெரியாதவர்கள் பின்வரும் இரண்டு பதிவுகளையும் வாசித்துவிட்டு இந்தப் பதிவை வாசிக்கவும்.

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்
கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

அண்மையில் கூகிளின் மின்னஞ்சல் சேவைக் கணக்கில் கைவைக்க முயன்ற சீன ஹக்கர்சால் பிரச்சனை ஆரம்பமாகியது. யாரும் எதிர்பார்க்காத [...]

கூகுளுடன் இணைந்து இந்தியாவும் சீனாவை சீண்டியது

தனது ஜிமெயில் வழங்கிகளை சீனாவில் இருந்து கொந்தளர்கள் (Hackers) கைப்பற்ற முயன்றதாகவும் அதன் மூலம் இனி தங்கள் அலுவலகம் சீனாவில் மூடபட்டாலும் மூடப்படாலாம் என்றெல்லாம் கூகிள் பேசியதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இப்போது கூகுளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. டிசம்பர் 15ம் திகதி இந்திய அரசின் வழங்கிகளையும் கைப்பற்ற சீனாவில் இருந்து ஹக்கர்ஸ் முயன்றதான நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது போல பலதடவை இந்தியாவின் மீது சைபர் யுத்தம் நடத்தப்பட்டுள்ளதாகவும் நாராயணன் தெரிவித்தார். இதைவிட தற்போது பிரித்தானியா அமெரிக்கா போன்ற [...]

தகவல் உரிமை மற்றும் சீனாவை நேரடியாக சீண்டிய கூகிள்

பேச்சுரிமை, தகவல் உரிமை போன்ற விடயங்களைக் கேட்டால் சீனாவிற்கு ஆகாது. எதையும் முளையிலேயே கிள்ளி எறியும் பழக்கம் உடையது சீனா. உலகம் எங்கும் சீனாவிற்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் சீனா எது பற்றியும் கவலைப் படுவதில்லை.

கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் நடந்த ஒரு நிகழ்வு சீனா மற்றும் கூகிள் இடையில் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் மனித உரிமைக்கு மீறலுக்கு எதிராகச் செயற்படும் நபர்களின் ஜிமெயில் கணக்குகளைக் கூறிவைத்து சீனாவில் இருந்து இணையத் தாக்குதல் [...]

வேலையில்லா திண்டாட்டத்தில் அலறும் அமெரிக்கா

உலக நிதி நெருக்கடி காரணமாக உலகமெங்கும் பல மில்லியன் கணக்கானோர் வேலையிழந்தனர். இலங்கை இந்தியா போன்ற தெற்காசிய நாடுகள் கூட இந்த நிதி நெருக்கடியில் நொந்து போயின. இதில் என்னவோ அதிகமாக அடிவாங்கியது அமெரிக்காதான்.

2007ல் ஆரம்பித்த இந்த நிதி நெருக்கடி காரணமாக அமெரிக்காவில் இதுவரை 7.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளன. இதில் 4.2 மில்லியன் வேலைவாய்ப்புகள் நிதிநெருக்கடி உச்சம் கொடுத்த 2009ம் ஆண்டில் இழக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி ஓய்ந்துவிட்டது எல்லாம் மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு திரும்புகின்றது [...]