பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.
இந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.
பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே [...]
இலங்கை அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட காணோளியை இங்கே காண்க
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
நேற்று இரவு 9.30 அளவில் திடீரென மின்சாரம் அணைக்ககப்பட்டுது. மின்சாரம் அணைந்தவுடன் புலிகளின் விமானங்கள் ஊடுருவுகின்றன என்ற சந்தேகம் எம் அனைவருக்கும் உருவாகிவிட்டது. அதை உறுதிப்படுத்தும் விதமாக கையடக்க தொலைபேசியில் செய்தி வந்து சேர்ந்தது. அதாவது கொழும்பில் உள்ள விமான எதுர்ப்பு பீரங்கிகள் உயிர்ப்பாகிவிட்டன. தாக்குதல் ஒன்று நடக்கலாம் என்றும் எதிர்வு கூறுவதாக அதில் கூறப்ப்பட்டிருந்தது.
Tracer bullets
அதை உறுதிப் படுத்தும் முகமாக சில நிமிடங்களில் இலங்கைப் படையினர் வானத்தில் சுடத் தொடங்கினர். Tracer Bullets வானமெங்கும் [...]
இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.
ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் [...]
இன்று கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் குண்டு ஒன்று வெடித்துள்ளது. குண்டு இராணுவத்தினர் சென்ற ஒரு பஸ் வண்டியை இலக்கு வைத்துத் தாக்கப்பட்டுள்ளது. இதில் 6 நபர்கள் காயம் அடைந்ததாகவும் அதில் இருவர் பொதுமக்கள் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது.
குண்டு எங்கே வெடித்தது என்று பார்த்தால் நான் அடிக்கடி சென்று வரும் பாதை. மாலுக்கடை பஸ் தரிப்பிடத்திற்கு அடுத்த தரிப்பிடத்திற்கு சற்றே முன்பாக வெடித்துள்ளது. அங்கு நிறையத் தமிழர்கள் குறிப்பாக வேலைதேடி தம் சொந்த இடம் விட்டு வந்த தமிழர்கள் [...]