பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர்.
இந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள்.
பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். பலரும் பிளாக்கரையே [...]
ஜபோன் பற்றிப் பேசும் போது இலங்கையர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அப்பிள் நிறுவனம் தமது ஐபோனிற்கான புதிய இயங்கு தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய இயங்கு தளம் மூலம் MMS மற்றும் வெட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளை நீங்கள் செய்ய முடியும்.
இதே வேளை அப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாதிரி ஒன்றை சந்தைக்கு அறிமுகப் படுத்த இருக்கின்றது. (இது iPhone 3GS என அறியப்படுகின்றது). இந்த மாதிரியானது ஒருங்கிணைந்த காணொளி [...]
இலங்கை அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட காணோளியை இங்கே காண்க
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
பாரதி எயார்டெல் நிறுவனம் பலத்த இழுத்தடிப்புகளுக்குப் பின்பு 12ம் திகதி, அதாவது வரும் திங்கட்கிழமை இலங்கையில் அதன் சேவையை ஆரம்பிக்க உள்ளது. ஏற்கனவே இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குள்ளநரித்தன விளையாட்டுகள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு போன்றவற்றினால் ஏற்றப்பட்ட சுணக்கம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது.
கொழும்பு மாநகரம் எங்கும் ஏயார்டெல் பதாகைகளை காணக்கூடியதாக உள்ளது. தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. பெருமளவில் வரவேற்பிருந்தாலும், உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் போன்ற தேசிய உணர்வும் இலங்கை மக்களிடையே இப்போது [...]
பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள்.
ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை உலகத் [...]
1950 களில் சிங்கபூர் பிரதமர் இலங்கை வந்ததும், பின்னர் கொழும்பைப் பார்த்து பிரமித்து என் நாட்டையும் இது போல மாற்ற வேண்டும் என்று சபதம் போட்டதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய பழைய கதையே. இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரும் கொழும்பு ஆசியாவின் பூந்தோட்டம் என்ற பெயரும் பெயரளவில்தான் உள்ளது. கொழும்பு போல நாற்றம் எடுக்கும் ஊரும், இலங்கையைப் போல கேட்பவரைக் கிலி கொள்ளச் செய்யும் நாடுகளும் உலகில் எத்தனை உண்டென்று விரல்விட்டு எண்ணிவிடலாம்.
நாட்டில் எந்தத் [...]
இந்தியாவைப் போலல்லாமல் இலங்கை அணி தாயகம் திரும்பியதும் பலமான வரவேற்பு வழங்கி கெளரவிக்கப்பட்டது. வெற்றியோ தோல்வியோ அவர்கள் கடைசிவரை போராடியமை இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.
இங்கே டோனி வீட்டு சுவரை இடிப்பது போல ஜயசூர்யா வீட்டுச் சுவரை உடைப்பதில்லை, கங்குலி வீட்டுக்கு கல்லெறிவது போல முரளி வீட்டுக்கு கல்லெறிவதில்லை.
கீழே உள்ளது இலங்கை அணியைப் பாராட்டி பாத்தியா சத்துஸ் என்ற பாடகர்கள் பாடிய பாடலை போட்டுள்ளேன் பாருங்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாடல் [...]
நாடு நல்ல நாடு என்ற தொடர்வினையில் அண்மையில் திரு.ரவி அவர்கள் என்னை அழைத்து இருந்தார். தமிழ் வலைப்பதிவு உலகம் தடம் மாறிச் செல்கின்றதோ என்று அனைவரும் கலங்கும் நேரத்தில் ரவி போன்ற அன்பர்கள் அதைப் பொய்ப்பித்து வருகின்றனர். அவர் அழைப்பை ஏற்று நான் இலங்கை பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன். இலங்கையில் இனப் பிரச்சனை போன்ற கசப்பான விடையங்களை இங்கே தவிர்த்து விடுவதாக முடிவெடுத்துள்ளேன். அது பற்றி பல பதிவுகள் இணையம் முழுவதும் இறைந்து [...]
இந்தத் தகவல் இலங்கை அன்பர்களுக்காக. இந்திய அன்பர்கள் தவறி வந்திருந்தால் சும்மா வந்ததற்காகத் தகவலை வாசித்துவிட்டாவது செல்லுங்களேன்.
தற்போது அகலப்பட்டை இணைப்பு 1000 ரூபா என்ற குறைந்தவிலையில் இருந்து வழங்கப்படுகின்றது. ஸ்ரீ லங்கா டெலிக்கொம் இந்த சேவையை அளிக்கின்றது. முன்பு ஆகக்குறைந்த விலை 2500 ரூபாவாக இருந்தது. 2500 ரூபாவுடன் வாட் வரி சேர்ப்பதன் மூலம் சுமார் 2800 ரூபா வரை மாதா மாதம் செலுத்த வேண்டி இருந்தது. இது சாதாரண நடுத்தரக் குடும்பத்தாருக்குச் கொஞ்சம் அதிகமான பணமே! [...]