இந்தியா சுற்றிய தமிழ்ப் பாடல்
இசைஞாணி இளையராஜா 80களில் கொடுத்த ஒரு மெகா ஹிட் பாடல்தான் சங்கத்தில் பாடாத கவிதை. 84இல் வெளியான இந்தப்பாடல் கிட்டத்தட்ட என்னுடைய வயதை உடையது. காலத்தைத் தாண்டி இன்றும் கேட்போர் மனதைக்கொள்ளை கொள்ளும் இந்தப் பாடல் இந்தியா முழுவதும் பல மொழிகளில் பாடப்பட்டதை அறிவீர்களா. முதலில் தமிழ்ப் பாடல் சங்கத்தில் பாடாத கவிதை படம்: ஆட்டோ ராஜா பாலு மகேந்திரா இசையால் மயங்கி இதை தனது மலையாளப்படத்தில் பாவிக்கின்றார். தும்பி வா என்று இன்றுவரை பலர் இந்தப்பாடலை [...]
இலங்கையில் 3டி சினிமா
சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை. இந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் [...]
நான் மகான் அல்ல – விமர்சனம்
காதல் கதையா க்ரைம் கதையா என்று யோசித்து முடிப்பதற்குள் படம் முடிந்து விடுகின்றது. முதல் பாகம் காதல் கதையாகவும் கார்த்தியின் கிளு கிளு காதல் நகர்வுகளுடன் நகர்கின்றது. அதே முரட்டுப் பொடியனாகத்தான் இன்னமும் கார்த்தி வலம் வருகின்றார். இரண்டாம் பாதி வன்முறையில் நனைகின்றது. முதல் பாதியிலேயே வன்முறை தொடங்கிவிட்டாலும் இரண்டாம் பாகத்தில் முற்றிவிடுகின்றது. கதை என்னவென்றால் கல்லூரி மாணவர்கள் மது, போதை வஸ்துக்கள் மற்றும் பெண்களைக் கற்பழிப்பு என்று அலைகின்றது. இவ்வாறு பாதிகப்பட்ட ஒரு பெண்ணைக் கடத்த [...]
சுறா ரியாக்சன் – இணையத்தில் விமர்சனங்கள்
ட்விட்டர் @webalfee naan avan illai – சமாதானமா போக புறா இல்ல சுறா vs சமாதானமா போக சாமி இல்ல ஸ் வாமி.. http://bit.ly/aOznOS @TBCD வசனம் பேசுவதில் ஒரு ங்கொன்னியா மாதிரி வேற குரலில் பேசுவாரே, அதை படம் முழுக்க செஞ்சி நம்மை சோதிக்கிறார் “சுறா” @dynobuoy @penathal சுறா மேரி… எங்க பேச்சை நாங்களே நோ லிசனிங்! அதுக்குதான் ஆயிரக்கணக்கான மாக்காள் இருக்காங்களே? scanman #சுறா படு கேவலம். தயவு செய்து காசையும் [...]
பையா விமர்சனம்
வழமை போல எல்லாரும் எழுதி முடித்த பின்னரே நான் இந்த திரைப்பட விமர்சனத்தை எழுத ஆரம்பிக்கின்றேன். புதுவருட விடுமுறைக்கு யாழ் சென்று சும்மா ஆணி புடுங்கிக்கொண்டு இருந்த வேளையில் சோதரன் அழைக்கவே யாழ் நகர் சென்று பையா படம் பார்க்கச் சென்றேன். அதிகமாக எதிர்பார்ப்பு வைத்திருக்கவில்லை காரணம் ஏற்கனவே பலரும் பல விதமான விமர்சனங்களை முன்வைத்திருந்தமையே. சூப்பர் என்று சிலரும் மொக்கை என்று சிலரும் சொல்லி வைத்திருந்த காரணத்தால் நானே சென்று பார்த்து முடிவெடுப்பதாக இருந்தேன். திரைப்படம் [...]
வில்லு ஒரே லொள்ளு – விமர்சனம்
நேற்றய தினம் கடும் பண நெருக்கடி மத்தியிலும் ஹிந்தி கஜனி திரைப்படம் பார்த்துவிடும் திட சங்கர்ப்பத்துடன் மருதானை சினி சிட்டி திரையரங்குக்கு சென்றேன். வாசலில் ஒரே கூட்டம், என்னடா இது கஜனி படத்திற்கு இவ்வளவு கூட்டமா? பரவாயில்லை அமீர்கானுக்கு இப்ப தமிழ் இளசுகள் மட்டத்திலயும் நல்ல ஆதரவு இருக்கு என்று நினைத்துக்கொண்டு கிட்ட போனபோது தான் தெரிந்த்து, இளய தளபதி விசய் அவர்களின் திரைப்படம் வில்லு வெளியாகின்றது என்று. என்னதானானாலும் கஜனி பார்த்துவிடும் வேகத்தில் உள்ளே சென்ற [...]
Channel [V] இல் முதல் தடவையாத் தமிழ் பாடல்
சானல் வீ இல் முதல் தடவையாக ஒரு தமிழ் பாடல் ஒளிபரப்பாகியுள்ளது. வாரணாயிரம் திரைப்படத்தில் வரும் அடியே கொல்லுதே எனும் பாடலே இவ்வாறு ஒளிபரப்பாகியுள்ளது. பொதுவாக சானல் வீயில் ஹிந்திப் பாடல்கள் மட்டுமே ஒளிபரப்பாகும். இந்த நேரத்தில் இவ்வாறு முதல் தடவையாக தமிழ் பாடல் ஒளிபரப்பாகியமை ஒரு நல்லவிடையம். தெற்கில் இருக்கும் திறமைகளுக்கும் சானல் வீ அங்கீகாரம் வழங்குகின்றமை அருமையான விடையமே. பாடல் வீடியோ அமைக்கும் காட்சி
தசாவதாரம் (2008) விமர்சனம்
ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது. வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று [...]
தமிழகம் வந்து மனம் நொந்த ஜாக்கி
Image via Wikipedia பாவப் பட்ட ஜக்கி சான், உலகில் எத்தனையோ நகரங்கள் இருக்க எங்கட சென்னைக்கு வந்தார். தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிலும் குடு குடு என்று சிறு பிள்ளை போல கலக்கினார். இருந்ததவர்களை எல்லாம் தன் கள்ளம் கபடமற்ற செயல்களால் சிரிக்க வைத்தார். வணக்கம் என தமிழில் சொல்லி பேசத் தொடங்கினார். எல்லாம் முடிந்து ஊர் திரும்பினால் அவருக்கு துன்பம் காத்திருந்தது. இவர் இந்தியாவில் மற்றய இந்தியக் கலைஞர்களை மதிக்கவில்லை, இந்தியாவின் தண்ணீர் போத்தலில் [...]
கலைஞரில் மண் திரைப்படம்
இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள். ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை [...]