வினை விதைத்தவன் – சிறுகதை
வெளியே பனி மோசமாக வீசிக்கொண்டு இருந்த்து. சுந்தரம் தனது கம்பளிப் போர்வையை இறுக்கிப் போர்த்தவாறே யன்னல் அருகில் வந்து ரொறண்டோ நகரத்தை நோட்டம் இட்டார். மறை ஒன்று செல்சியஸ் வெப்பத்தில் நகரம் விறைத்துப்போய் இருந்தது. சுந்தரம் இருக்கும் தொடர்மாடியில் இருபதாம் அடுக்கில் சுந்தரத்தின் வீடு. யன்னல் அருகில் வந்து பார்த்தால் டொறண்டோ நகரின் பளபளக்கும் டவுன்டவுன் அழகாகக் காட்சியளிக்கும். எங்கும் பனிக் குவியல்களாக இருந்தன. வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்து இருந்தது. ஆனாலும் வாகனங்கள் தமது ஒழுங்கையிலயே முன்னே [...]
கொழும்பு 2019
இடம்: கொழும்பு நேரம்: காலை 7.30 ஆண்டு: 2019 விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள். கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் [...]
இரவுகள் தோறும்
தனது கார் கண்ணாடியை சற்றே கீழிறக்கிப் பார்த்தான் குகன். சில் என்று காற்று வீசிக்கொண்டு இருந்தது. இவனது டொயோட்டா ப்ராடோ சத்தமில்லாமல் காற்றைக் கிழித்துக்கொண்டு எ-9 வீதியில் பயனித்துக்கொண்டிருந்தது. பூச்சிகளின் சங்கீத ஒலியும் அவ்வப்போது எதுவென்றே தெரியாத சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. தூக்கம் கண்களை மெல்லக் கட்டத்தொடங்கியது. “ம்ஹூம்…. நித்திரையோடு ஓடக்கூடாது” என்று நினைத்துக்கொண்டான். காரில் இருந்த கருவி இன்னமும் 5 நிமிடத்தில் ஒரு சிற்றுண்டி சாலை வருவதாக சைகை காட்டியது. வேகத்தை மள மளவென்று குறைத்தவாறு சிற்றுண்டி [...]
கண்காட்சி (சிறுகதை)
எங்கோ ஒரு தூரத்து கூரையில் இருந்து சேவல் ஒன்று தன் முன்னங்காலில் எம்பி மிகுந்த பிராயத்தனத்துடன் ஒரு தடவை கூவியது. சூரியனின் கதிர் பட்டு அந்தச் சேவலின் சிறகுகள் பளபளத்தன. அங்கங்கே பறவைகள் தம்பாட்டுக்கு தாங்களும் “கீச்.. கீச்…” என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டிருந்தன. சூரியன் மேற்கில் அலுப்பு முறிக்கத் தொடங்கிவிட்டான். இத்தனையும் நிதானமாக நடக்க சுகுமார் மட்டும் பதறித் துடித்து நேரத்தைப் பார்த்தான். காலை நான்கு மணி இருக்கும், சுகுமார் எழுந்துவிட்டான். அருகிலே தூங்கிக்கொண்டு இருந்த [...]
நியன்டதாலின் காதல் -சிறுகதை
இன்றிலிருந்து சுமார் 28,000 ஆண்டுகள் பின்னோக்கிச் வரலாறு திரும்பிப் பார்க்கின்றது. தற்போதைய பிரான்சு, ஸ்பெயின் இடையில் உள்ள அந்தப் பரந்த சமவெளியில் ஒரு உருவம் நிலை குலைந்து நிலத்தில் குப்புறப் படுத்துக்கிடக்கின்றது.. அதுதான் நம் கதையின் நாயகன். ஒரு நியன்டதால் இனத்தை சேர்ந்த அரைமனிதன். “ஓ..ஜீ…!!!!” அந்த உருவத்தின் வாயில் இருந்து அடக்க முடியாத வேதனையுடன் பிளிரல் ஒன்று மேல் எழும்புகின்றது. பின்னர் அது மெல்ல மெல்ல அடங்கி முனகல் ஆகின்றது. அதில் அவன் இயலாமையும், வெறுப்பும், [...]
அவளைக் காண (நிமிடக் கதை)
ஜன்னலினூடாக எட்டிப் பார்க்கின்றான். எங்கும் கருமேகங்கள் இராஜகம் பண்ணிக்கொண்டிருந்தன். அதைப்பற்றி அலட்டும் மனநிலையில் அவன் இல்லை. இன்றில்லாவிட்டால் என்றுமே முடியாது மனதுக்குள் எண்ணிக்கொண்டான். நான் நிச்சயம் போகவேண்டும். முதலில் மனதைத் திடமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தான். மனதில் திடம் இல்லாவிட்டால் எப்படி அவள் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பது. வெள்ளை நிற ஷேர்ட்டை அணிந்து கறுப்பு நிறக் கேர்ட்டையும் அணிந்து கொண்டு புறப்படுகின்றான். அவளுக்கு கறுப்பு நிறம் மிகவும் பிடிக்கும். அவள் கூட இன்று [...]
64 : முதுமையின் உறவு
மாலை ஐந்து மணி இருக்கும். சூரியன் தன் வேலையை முடிப்பதற்காக முஸ்தீபு போட ஆரம்பித்த நேரம். மணியம்மா மட்டும் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வீட்டின் பின் பக்கம் சென்றுகொண்டு இருந்தார். யாரும் கண்டு விடுவார்களோ என்று அவர் மனம் படபடத்துக் கொண்டு இருந்தது. அவர் கையில் ஒரு பிஸ்கட் துண்டுகள். எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் கையெங்கும் முதுமை தந்த பரிசுகளான சுருக்கங்கள். அதனிடையே அழகாக அந்த சிறிய பிஸ்கட் துண்டு மினு மினுத்துக்கொண்டு இருந்தது. [...]
63 : என் காதல் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)
இது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய கதை!! இன்று காதலர் தினம் என்பதால் இதைப் பதிக்கலாம் என்று தோன்றியது.. ஏற்கனவே வாசித்தவர்கள் பொறுமை காத்தருளவும். என்னால் ஏனோ நித்திரைகொள்ள முடியவேயில்லை. கண்களை மூடியவாறு புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தேன். எவ்வளவுதான் முயன்றாலும் நேற்றய நிகழ்வுகளை என்னால் மறக்கவே முடியவில்லை. அவள் நேற்றுப் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தச் சிரிப்பு! தலையை அடிக்கடி கொதும் விரல்கள்! நெற்றியில் விழும் அந்த [...]
45 : யாருக்கு இலவசம் (சிறுகதை) – தேன்கூடு போட்டிக்காக
வானம் எங்கும் கரிய பெரிய மேகங்கள் உருண்டு திரண்டு நகர்ந்து கொண்டு இருந்தன. அப்பப்போ கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்துடன் மின்னலும் அதைத் தொடர்ந்து இடியும் கேட்டுக்கொண்டே இருந்தது. மழை சாதுவாகத் தூறத் தொடங்கிவிட்டது. அந்தப் பழைய சுண்ணாம்பு வீட்டிலிருந்து சலிப்புடன் ஒரு உருவம் எட்டிப்பார்த்தது. இன்றும் இப்படிப் சில பழைய சுண்ணாம்பு வீடுகளை யாழ்பாணத்தின் புறநகர்ப்பகுதிகளில் காணலாம். அந்தக் கலைந்த கேசமும் இளமையிலேயே முதுமை தோன்றிய அந்த முகமும் முதற் பார்வையிலேயே காட்டிக்கொடுத்துவிடும் இவள் ஒரு நடுத்தரக் [...]
30 : எனக்கு எப்போ விடுதலை – தேன் கூடு போட்டிக்காக.
யன்னலைத் திறந்தாள் விமலா. எதிரே கடற்கரை பரந்து கிடந்தது. கடற்கரை உப்புக் காற்று ஏற்கனவே கலைந்திருந்த அவள் கேசத்தை மேலும் கலைத்தது. திடீரென காற்று கொஞ்சம் வேகமாக வீசவே அது உப்பு மணத்துடன் சிறுது மணலையும் அள்ளிவந்து அவள் முகத்தில் தூற்றியது. சினப்பதற்குப் பதிலாக அவள் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை. தன் விரல்களால் நிதானமாக மண்ணைத் தட்டிவிட்டாள். பின்னே திரும்பிப் பார்த்தாள் அவளது மாமியார் சுயநினைவற்று படுத்த படுக்கையாக இருக்கின்றார். இவள் ஆதரவற்று நின்றபோது ஆதரவு [...]