எனக்கு வெட்கம்
நாலரை மணி வகுப்பு மூன்று மணிக்கே வகுப்பில் காதலுக்காக ஒரு மணி நேரம் செலவழித்தால் என்ன? நாலரை மணி நத்தையாய் வருகின்றது நாலரை வருடம் கடந்துவிட்டதாய் உணர்வு என்னவள் வரவில்லை காத்திருக்கின்றேன் காதலியே காலமெல்லாம் காத்திருபராம் காதலர்கள் ஒரு மணிநேரம் காக்க மாட்டேனே என்னவளே! நாலரை மணிக்கு நாதஸ்வர இசைபோல நகர்ந்து வருகின்றாள் வைத்த கண்ணை எடுக்க முடியவி்ல்லை என்னதான் நவ நாகரீகப் பெண்கள் புரட்சி படைத்தாலும் இவளின் பாவாடைத் தாவணியின் பரம இரசிகன் நான் ஒரு [...]
இதுவே போதும்
வளி மண்டலத்தில் உந்தன் வாசம் நாசி வழியே சுவாசிக்கின்றேன் உள்ளே சென்ற சுவாசம் வெளியே வர மறுக்கின்றது மூச்சடைத்து செத்தாலும் பரவாயில்லை உன் வாசமே இத்தனை அழகென்றால் நீ எப்படி இருப்பாய் மீண்டும் உன் வாசம் காற்று வழியே வருகின்றது வந்த திசை நோக்கிப் பறக்கின்றேன் தூரத்தில் தெரிகின்றாய் மஞ்சளாய், அழகாய் கலகலவென்று உன் அருகில் வந்துவிட்டேன் பேச நினைத்தவை அனைத்தும் தொண்டைக் குழியில் வற்றுகின்றது எங்கிருந்தோ வந்து தாழ்வு மனப்பாண்மை ஒட்டுகின்றது [...]
காத்திருக்கின்றேன் காதலனே
உறுமிக்கொண்டு நகரும் கரு மேகம் கதறிக்கொண்டு நகரும் புகையிரதம் அமைதியாக அலரும் என் இதயம் கடைசி முத்தம் நீ தந்து நகர்ந்து விட்டாய் புகையிரதத்துள் காத்திருக்கின்றேன் காதலனே சொட்டும் ஒவ்வொரு மழைத்துளியும் உன் பெயரைச் சொல்கின்றன அவை பூமியில் பட்டுத் தெறிக்கயில் நம் முத்தச் சத்தம் கேட்கிறதே உனக்கும் அது கேட்குமா? காத்திருக்கின்றேன் காதலனே காதலனே நீ காவியனாகிவிடுவாயா இல்லை காதலியைக் காண வருவாயா? காத்திருக்கின்றேன்.. காத்திருப்பேன் காதலியாக காலம் கடந்தாலும் காத்திருக்கின்றேன் காதலனே தமிழ்மன்றம்.காம் இல் [...]
72 : பெரு மூச்சு விடுகின்றேன்!!
பேச மனம் துடிக்கும்… கடைக் கண் பார்வைக்கு மனம் ஏங்கும்! ஏளனச் சிரிப்பைக் கூடஎனக்காக உதிர்த்தாளோ எனஎண்ணத் தோன்றும்!! நண்பியுடன் பேசத் திரும்பினால்என்னைப் பார்க்கத் திரும்பியதாகத் தோன்றும் கடந்து செல்கையில் மல்லிகைப மலர்கள் கடந்து சென்றதாகத் தோன்றும் உன் நீல விழி பார்க்கையில்நீல வானம் உனக்கு மண்டியிட்டதாகத் தோன்றும் அவள் சுட்டு விரல் உயர்த்துவதைப் பார்க்கையில்சுக்கிரன் கூட பணிந்துவிட்டதாகத் தோன்றும் என்னவளின் வேல் விழிகளில்கோடி மின்னல் காண்பேன்அந்த மின்னல் வந்துஇதயத்தைத் தாக்குவதையும்வெண் மேகம் போல இரசிப்பேன் அவள் [...]
நண்பன் தனேஷின் கவிதைகள்
“செருப்பில்லாமல் நடக்கும் போதுதான் முள் குத்துகிறது, நீ இல்லாமல் நடக்கும் போதுதான் வாழ்க்கையே குத்துகிறது முள்ளாய்!”“மரணப்பொழுதில், என் கண்கள் வாங்கிக்கொண்டு போகும் கடைசிப் பரிசு உன் முகமாக இருக்கட்டுமே!” “நான் : போ! போ! போறதுக்கு முன்னாடி எனக்கு ஒரு காரியம் பண்ணிட்டுப்போ நீ : என்ன? நான் : அதான் …….. காரியம்” உன் கால் தடம் எனும் கவிதைக்கு இசை அமைத்துக்கொண்டு போகிறது உன் கொலுசு !!!நீ வாழ்வதால்தான் இது பூவுலகம் இல்லையென்றால் வெறும் [...]