பாகம் 4 : nodejs தமிழில்
மொடியூல்களை ஏற்றுதல் இதுவரை வந்த பதிவுகளை வாசித்திருந்தால் உங்களுக்கு node.js இன் Module கள் பற்றிய ஒரு அறிவு கிடைத்திருக்கும். முதலே கூறியபடி வேர்ட்பிரஸ் சொருகிகள் (Plugins) போல node.js இன் சொருகிகள்தான் இந்த Moduleகள். நாம் அன்றாடம் செய்யும் வேலைகளை சில வரிகளை எழுதாமல் இந்த மொடியூல்களைப் பயன்படுத்தி எழுதிவிடலாம். JavaScript மொழியானது இன்று இணையத்தில் எங்கும் பரந்து விரிந்து வாழும் ஒருமொழி. முதலில் DHTML இல் சில மாற்றங்களை ஏற்படுத்த இணையவடிவமைப்பாளர்களால் பாவிக்கப்பட்டு பின்னர் [...]
பாகம் 3 : Node.js தமிழில்
nodejs தமிழில் : பாகம் 1 nodejs மற்றும் Callback function : பாகம் 2 NPM அல்லது Node Package Manager எனப்படுவது மூன்றாம் மென்பொருள் வல்லுனர்களால் எழுதப்பட்ட Module களை உங்கள் கணனியில் நிறுவ உதவுகின்றது. உங்களுக்கு வேர்ட்பிரசில் சொருகிகள் (Plugins) போல node.js ற்கு NPM உதவுகின்றது. பொதுவாக NPM மூலம் பின்வரும் மூன்று வேலைகளைச் செய்யலாம். மூன்றாம் மென்பொருள் வல்லுனர்கள் எழுதிய மொடியூல்களைத் தொகுத்து வைக்கின்றமை உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் மொடியூல்களை [...]
பாகம் 2 : node.js தமிழில்
nodejs தமிழில் : பாகம் 1 ஆரம்ப காலங்களில் ஒருவர் ஒரு கணனியில் ஒரு தடவையில் ஒரு செயலை மட்டும் நிகழ்தும் நிலமையே இருந்தது. அதற்கான காரணம் அக்காலத்துக் கணனிகளின் வினைத்திறனும் கணனி வலையமைப்புகளின் குறைபாடுகளேயாகும். ஆயினும் காலவோட்டத்தில் கணனிகளின் வினைத்திறன் கூடிவிட்டமையுடன் கணனி வலையமைப்புகள் புதிய ஒரு நிலையைப் பெற்றுவிட்டன. குறிப்பாக இன்றைய இணையப் புரட்சி காரணமாக செயிலிகள் ஒரு செயலிற்காக காத்திருக்க வேண்டும் எனும் நிலமை மாறத் தொடங்கியது. Blocking Programming எனும் முறமையின் [...]
பாகம் 1 : Node.js தமிழில்
நோட்ஜெஎஸ் இன்று பல மென்பெருள் வல்லுனர்கள் மத்தியிலும் அடிக்கடி உச்சரிக்கப்ப்படும் ஒரு மந்திரச்சொல். நோட் ஜேஸ் றையல் டால் (Ryan Dhal) எனபவரினால் எழுதப்பட்டது. இது கூகிளினால் எழுதப்பட்ட வி8 ஜாவாஸ்கிரிப்ட் இயந்திரத்தினால் பின்ணனியில் இருந்து இயக்கப்படுகின்றது. நோட்ஜேஸ் என்றால் என்ன? நோட்ஜேஎஸ் ஒரு வழங்கி சார் தொழில்நுட்பம் (Server side technology). ஆனால் இதில் வியப்புத்தரும் விடையம் என்னவென்றால் ஜாவாஸ்கிரிப்ட் கொண்டு வழங்கிசார் மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடக்கூடியதாக இருக்கின்றமையே. பொதுவாக ஜாவாஸ்கிரிப்ட் இணைய உலாவி (Internet [...]
வேர்ட்பிரசிற்கான மொபைல் தீம்
ப்ளாக்கர் பயன்படுத்தும் நண்பர்களுக்கு தங்கள் தளத்தை நகர்பேசி அல்லது செல்பேசியில் பார்க்க அதற்கான வார்ப்புருவை முடக்கிவிடமுடியும். இதே வசதி இப்போது தனி வழங்கிகளில் வேர்பிரஸ் தளத்தை நிறுவிப் பயன்படுத்தும் நண்பர்களுக்கும் கிடைக்கின்றது. ஜெட்பக் எனும் சொருகியைப்பற்றி நீங்கள் கேள்விப்ப்படிருப்பீர்கள். அனைத்து வேர்ட்பிரஸ் பயனர்களும் கட்டாயம் பாவிக்க வேண்டிய சொருகியிது. தளத்தின் புள்ளிவிபரங்கள், மறுமொழிப்பெட்டியில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற முறைகளில் புகுபதிகைசெய்ய உதவல் மேலும் சமூக வலைத்தளங்களில் உங்கள் பக்கத்தைப் பகிர உதவல் எனப் பல்வேறு வசதிகளை இந்த [...]
YouTube ஐயும் நீக்கிய அப்பிள்
iOS6 இன் மென்பொருள் வல்லுனருக்கான சிறப்பு முன்னோட்ட பதிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றது. நீங்கள் ஒரு அப்பிள் மென்பொருள் வல்லுனராக இருந்தால் நீங்களும் இந்தப் பதிப்புக்களைப் பெற்று இருப்பீர்கள். இவ்வாறு அண்மையில் வெளிவந்து iOS6 பீட்டா பதிப்பில் யூடியூப் (YouTube) செயலி நீக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதே போன்று அப்பிள் கூகிள் மப்ஸ் செயலியை நீக்கி அப்பிள் மப்ஸ் செயலியை நிறுவியமையைக் குறிப்பிட்டு இருந்தேன். இப்போது யூடியூப் செயலியும் அப்பிளின் டெஸ்க் டொப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தீராமல் [...]
கூகிளின் புதிய படைப்புகள்
மைக்ரோசாப்ட் அப்பிளைத் தொடர்ந்து இந்த வருடம் கூகிளினது 5ம் கூகிள் ஐ/ஓ (Google I/O) நடைபெறத் தொடங்கயுள்ளது. நேற்றைய பிரதான உரையின் போது கூகிளின் புதிய படைப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டது. வழமைபோல இம்முறையும் அன்ரொயிட்டின் சாதனைகளை கூறியே கருத்தரங்கு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த வருடம் நடந்த கருத்தரங்கில் சுமார் 100 மில்லியன் அன்ரொயிட் கருவிகள் பாவனையில் உள்ளதாக அறிவித்தது கூகிள். இம்முறை இந்த எண்ணிக்கை 400 மில்லியனாக அதிகரித்து விட்டதாகவும் அறியத்தருகின்றது. அத்துடன் ஒரு நாளைக்கு 1 மில்லியன் [...]
கூகிள் தளத்திற்கு பிண்ணனி படம் அமைத்தல்
கூகிள்.காம் தளத்தின் பக்கத்திற்கு பிண்ணனிப் படம் போட பல்வேறு நிரல்களும் தளங்களும் இருகின்றன. இப்போது கூகிளே இந்த வசதியை உத்தியோக பூர்வமாக தானே அறிவித்துள்ளது. படிமுறை மிக இலகுவானது. http://www.google.com/addphoto என்ற தொடுப்பிற்குச் செல்க ஒரு படிமத்தைப் பதிவேற்றுக அல்லது இருக்கும் படிமங்களில் ஒன்றைத் தெரிவுசெய்க. அனைத்தும் சரி. இந்த புதிய பிண்ணனி போடும் வசதி உங்களுக்குப் பிடித்துள்ளது என்று நம்புகின்றேன்.
செல் பேசியில் தமிழ் மொழி
இணையத்திலும் கணனியிலும் தமிழில் எழுதி வாசிப்பது இப்போது இலகுவான காரியம் ஆகிவிட்டது. ஆனால் தகவல் தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்து வரும் செல்லிடத் தொலைபேசிகளில் தமிழின் பாவனை மந்தமாகவே உள்ளது. அண்மையில் செல்பேசி மூலம் ஒரு ட்விட்டர் செய்தியிட அது எப்படி என்று காங்கோன் கேட்டதன் விழைவே இந்தப் பதிவு. பொதுவாக செல்பேசிகளில் ஆங்கில மொழி இயல்பிருப்பாகவும் பிரஞ்சு, சீனம், ஜப்பானிய மொழிகள் இணைப்பாகவும் வருவதுண்டு. தற்போதைய நிலையில் மற்றய மொழிகளுக்கு இணையாக ஹிந்தி மொழிக்கு செல்பேசிகளில் தனியிடம் [...]
Google Buzz இல் நண்பர்களை வதைப்பதெப்படி!
1. பஸ் ஒன்றை முதலில் ஓட விடுங்கள் 2. உங்கள் நண்பர்களைப் பதில் போட நேரம் அளியுங்கள் 3. இப்போது கேள்வியை மாத்திடுங்க (Mu Ha Ha Ha !!!) 4. அப்புறம் என்ன, கலாயுங்க எங்கயோ ஒரு ஆங்கிலத் தளத்தில் இப்படியாகச் செய்யுமாறு கூறியிருந்தார்கள். எதென்றாலும் அதை நம் தாய் மொழியில் செய்து பார்த்தால் கிடைக்கும் திருப்தியே தனிதான்!