உபுண்டு 10.4 இல் தமிழில் தட்டச்சிடல்
முன்பு ஒரு பதிவில் உபுண்டு 9.04 இல் தமிழ் 99 இல் தட்டச்சிடும் வசதி பற்றி எழுதியிருந்தேன். அதில் ஸ்கிம் எனும் ஒரு மென்பொருளை நிறுவி அதன் மூலம் தமிழில் தட்டச்சிடும் வசதி பற்றி எழுதியிருந்தேன். இந்த முறை எந்தவொரு மேலதிகப் பொதியையும் நிறுவாமால் 10.4 பதிப்பில் எவ்வாறு தமிழில் தட்டச்சிடுவது என்று எழுதுகின்றேன். முதலில் System => Preference => iBus Preference என்று நகர்ந்து கொள்ளுங்கள் Input Method எனும் தாவலைத் தெரிவுசெய்துகொள்ளுங்கள் கிடைக்கும் [...]
உபுண்டு 9.04 இன் கூகிள் குரோமில் Flash நிறுவுதல்
லினக்ஸ்க்கான கூகிள் குரோம் பதிப்பில் எந்த சொருகிகளும் செயற்படுவதில்லை. இன்னமும் உத்தியோக பூர்வ பதிப்பு வெளிவராத காரணத்தால் லினக்ஸ் ஊராக்கள் Flash செயலிகள், கோப்புகளை கூகிள் குரோமில் இயக்க முடிவதில்லை. ஆனாலும் ஒரு மாற்ற வழி மூலம் கூகிள் குரோமில் Flash ஐ நிறுவலாம். படத்தில் காட்டியவாறு Terminal ஐ திறக்கவும். பின்னர் பின்வரும் கொமாண்டை டர்மினலில் இயக்கவும். இதன் மூலம் Flash plugin ஐ நிறுவிக்கொள்ளுங்கள் sudo aptitude install flashplugin-installer பின்னவரும் கொமாண்டை நிறுவி [...]
உபுண்டுவில் DVD படம் காட்டல்
அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு பையன் கொடுத்த ஓயாத தொல்லையால் இந்தப் பதிவு உதிக்கின்றது. உபுண்டு நிறுவியபின் உடனடியாக உங்களால் DVD திரைப்படங்களை இயக்க முடியாது. காரணம் டிவிடிக்களை இயக்க தேவையான ஓட்டி, கோடெக் போன்றவை உரிமம் பெற்றவை. பொதுவாக உரிமங்கள் உள்ள எந்த மொன்பொருளும் இயல்பிருப்பாக உபுண்டுவில் கிடைப்பதில்லை. இதற்கு நீங்கள் டிவிடி பார்க்க தேவையான மென்பொருட்களை நிறுவ வெண்டும். முதலில் டேர்மினலுக்கு செல்லுங்கள் (Application -> Accessories -> Terminal) அங்கே பினவரும் கொமாண்டை [...]
உபுண்டு 9.04 ல் தமிழ் 99
பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை நான் கேட்டபடி அனுப்பிப் போட்டான். சீ.டிக்கள் தாபாலில் வந்து கிடைத்த நிமிடம் ஒரே தர்ம சங்கடமாகிவிட்டது. இவங்கள் மினக்கட்டு அனுப்பியிருக்காங்களே, இந்த சீ.டியை அநியாயமாக விடக்கூடாது என்று நினைத்தேன். அதன் [...]
உபுந்துவில் rar கோப்புகளைத் திறத்தல்
உபுண்டுவில் ஆர்.ஏ.ஆர் முறையில் சுருக்கப்பட்ட கோப்புகளை இன்று திறக்க முயன்றபோது அது முடியாமல் போனது. காரணத்தைத் தேடிப்பார்க்கையில் உபுண்டுவுடன் அதற்கான ஆதரவு இயல்பிருப்பாக இல்லை. நீங்கள் அதை உயிர்ப்பூட்டிக்கொள்ள வேண்டும். ஆர்.ஏ.ஆர் தொழில்நுட்பம் உரிமம் கொண்டிருப்பதால் அதை அவர்கள் இயல்பிருப்பாக உபுண்டுவில் தருவதில்லை. பின்வரும் நிரலை உங்கள் டேர்மினலில் இயக்கி rar ஆதரவை உபுண்டுவில் உயிர்ப்பூட்டுங்கள். sudo apt-get install unrar-free
Ubuntu 8.10 வும் Skype உம்
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஸ்கைப்பில் என்னுடைய நண்பனுடன் உரையாட வேண்டியிருந்தது. ஆனால் என் உபுண்டு இயங்கு தளத்தில் ஸ்கைப் இருக்கவில்லை. ஆகவே ஸ்கைப் பதிவிறக்க தளத்தில் ஸ்கைப்பை இறக்கிக்கொண்டேன். பதிவிறக்கியபோதும் அந்த ஸ்கைப் உபுண்டு பழைய பதிப்புகளுக்கானது என்று அறிந்துகொண்டேன். சரி என்னானாலும் பரவாயில்லை என்று நிறுவிக்கொண்டேன். பலத்த சந்தேகத்துடன் புகுபதிகை செய்தபோது பிரைச்சனை இல்லாமல் புகுபதிகையானது. பின்னர், ஒலி அரட்டையை ஆரம்பிக்க முயன்றபோது ஸ்கைப் ஓடியோ எர்ர் என்று பிழைச் செய்தி தர ஆரம்பித்தது. சலித்திப் [...]
உபுண்டுவில் µTorrent
நேற்று முன்தினம் நீண்டநாள் ஆசை ஒன்று நிறைவேறியது. அதாவது எனது ஹெச்பி பவிலியன் 9000 டிவி ல் உபுண்டு 8.10 நிறுவினேன். முதலில் கணனியை எப்படி பாட்டிசன் செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன். சாதாரண இயங்குதள குறுவட்டு இருந்தால் இலகுவாக இந்த வேலையைச்செய்துவிடலாம் ஆனால் பிராண்ட் கணனிகளில் இயங்குதளம் தனியே தராமல், மீளமைக்கும் வட்டுடன் தருவதனால் பிரைச்சனை. இது பற்றிய குளப்பத்தில் இருக்கும் போது, இலங்கையின் வலைப்பதிவர் ஒருவர் உபுண்டுவில் வன் தட்டு பிரிக்கும் செயலி [...]