கடுப்பேற்றும் இலங்கை வானொலிகள்
ஒரு காலத்தில் வானொலி என்றால் இலங்கை வானொலிதான். தமிழ் நாடு தொடக்கம் இலங்கைவரை வியாபித்திருக்கும் தமிழர் வீடுகளெங்கும் தூய தமிழில் இலங்கை வானொலி ஒலித்தது. பிலபல பட்டிமன்ற நடுவர் லியோனி கூட ஒரு முறை இலங்கை வானொலி கேட்டுத்தான் அக்காலத்தில் தாங்கள் பாட்டுக்களைத் தெரிந்துகொண்டதாக கூறுவார். ஆனால் இன்று இலங்கை வானொலி மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து வானொலிகளின் நிலமைதான் என்ன? பொதுவாகவே தொலைக்காட்சியிடம் இல்லாத ஒன்று வானொலியிடம் இருக்கின்றது. வானொலி கேட்டுக்கொண்டு எமது நாளாந்த வேலைகளைச் [...]
இலங்கையில் 3டி சினிமா
சிறுவயதில் பாடசாலையில் படிக்கும் காலத்தில் மைடியர் குட்டிச் சாத்தான் என்று ஒரு முப்பரிமானத் திரைப்படம் வெளியானது. இதுவே எனது வாழ்க்கையில் அல்லது பலரது வாழ்க்கையில் கண்ட முதலாவது முப்பரிமானத் திரைப்படம். ஆயினும் உலகம் முழுவதும் 3டி திரைப்படங்கள் சக்கை போடும் நேரத்தில் இலங்கையில் மட்டும் எப்போதும் 3டி திரைப்படங்கள் வெளியாவதே இல்லை. இந்த நீண்டநாள் குறையை இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள மஜஸ்டிக் சினிமா நீக்கியுள்ளது. இனிமேல் 3டி திரைப்படங்களைக் காட்டுவதற்காகவே என்று ஒரு திரையரங்கை மஜஸ்டிக் ஐந்தாம் [...]
கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி 2010
ஒவ்வொரு வருடமும் கொழும்பில் புத்தகக் கண்காட்சி நடைபெறுவதுண்டு. இம்முறையும் பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது. செப்தெம்பர் 18 தொடக்கம் 26 வரை இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் சென்று ஏதாவது ஒரு ஆங்கிலப்புத்தகத்தை வாக்கிவரும் எனக்கு இம்முறை பெருமளவில் தமிழ் புத்தகங்களை வாங்க கிடைத்தமை பெரும் சந்தோசம். https://www.nhm.in/ தளத்தில் விற்பனைக்கு இருக்கும் பல புத்தகங்களை பார்த்து பல நாட்களாகக் கொட்டாவி விட்டாலும் இன்னமும் அந்தப் புத்தகங்களை இலங்கையில் [...]
இலங்கை பதிவர் சந்திப்பு – 2009
பல காலமாகவே பலராலும் விரும்ப பட்டாலும் காலத்தின் சில சில நெருக்கடிகளால் பலரும் இந்த முயற்சியை ஆரம்பிப்பதிலும் நடத்துவதிலும் பின்னடித்தனர். இப்போது இதற்கான கால நேரங்கள் கனிந்துவிட்டதால் இலங்கையில் நான்கு சிங்கங்கள் (அப்படித்தான் வந்தியத்தேவன் சொன்னார்) களத்தில் இறக்கி இந்த அருமையான நிகழ்வை நடத்திக் காட்டியுள்ளனர். இந்த நிகழ்விற்கு இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இன்றய தினத்தில்தான் பிளாக்கர் தளத்தின் 10ம் பிறந்தநாள். அடப்பாவமே அதுக்கும் கேக்கு வெட்டி கொண்டாடிட்டானுகள். பெரும்பாலம் பலரும் தங்களது அனுபவங்களையும், கருத்துக்களையும் கலந்துகொண்டனர். [...]
இலங்கையில் ஐபோன்
ஜபோன் பற்றிப் பேசும் போது இலங்கையர்கள் மிகவும் பாவப்பட்டவர்கள். அப்பிள் நிறுவனம் தமது ஐபோனிற்கான புதிய இயங்கு தளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த புதிய இயங்கு தளம் மூலம் MMS மற்றும் வெட்டி ஒட்டுதல் போன்ற வேலைகளை நீங்கள் செய்ய முடியும். இதே வேளை அப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாதிரி ஒன்றை சந்தைக்கு அறிமுகப் படுத்த இருக்கின்றது. (இது iPhone 3GS என அறியப்படுகின்றது). இந்த மாதிரியானது ஒருங்கிணைந்த காணொளி கமிரா மற்றும் பல வசதிகளை [...]
கொழும்பில் தாக்குதல் நடத்தும் புலிகளின் விமானம் – காணோளி
இலங்கை அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் வெளியிட்ட காணோளியை இங்கே காண்க
Airtel இலங்கையில் 12ம் திகதி ஆரம்பம்
பாரதி எயார்டெல் நிறுவனம் பலத்த இழுத்தடிப்புகளுக்குப் பின்பு 12ம் திகதி, அதாவது வரும் திங்கட்கிழமை இலங்கையில் அதன் சேவையை ஆரம்பிக்க உள்ளது. ஏற்கனவே இருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் குள்ளநரித்தன விளையாட்டுகள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு போன்றவற்றினால் ஏற்றப்பட்ட சுணக்கம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. கொழும்பு மாநகரம் எங்கும் ஏயார்டெல் பதாகைகளை காணக்கூடியதாக உள்ளது. தொலைக்காட்சிகளிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிவிட்டது. பெருமளவில் வரவேற்பிருந்தாலும், உள்நாட்டு சேவைகளைப் பயன்படுத்த வேண்டும் போன்ற தேசிய உணர்வும் இலங்கை மக்களிடையே [...]
இலவச SMS அனுப்புதல்
பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள்.
கலைஞரில் மண் திரைப்படம்
இன்று மாலை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது, வரும் ஞாயிற்றுக் கிழமை கலைஞர் தொலைக்காட்சியில் மண் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது என்பதை அறிந்து கொண்டேன். வழமையான பீடிகையுடன் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக…. என்று தொடங்கினார்கள். ஏற்கனவே இந்த மண் திரைப்படத்தின் விமர்சனம் எழுதியிருந்தேன். சிலர் ஆமோதித்தனர் சிலர் இல்லை என்றிருந்தனர். இதைவிடப் பலர் குறுவட்டு கிடைக்காத காரணத்தால் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் இந்த அர்த்தமற்ற அல்லது காலத்தின் தேவைக்கு உதவாத தமிழ் திரைப்படத்தினை [...]
இலங்கையின் உயர்கல்வி பற்றி ஒரு பார்வை
1950 களில் சிங்கபூர் பிரதமர் இலங்கை வந்ததும், பின்னர் கொழும்பைப் பார்த்து பிரமித்து என் நாட்டையும் இது போல மாற்ற வேண்டும் என்று சபதம் போட்டதும் நீங்கள் அறிந்திருக்கக் கூடிய பழைய கதையே. இன்று இந்து சமுத்திரத்தின் முத்து என்ற பெயரும் கொழும்பு ஆசியாவின் பூந்தோட்டம் என்ற பெயரும் பெயரளவில்தான் உள்ளது. கொழும்பு போல நாற்றம் எடுக்கும் ஊரும், இலங்கையைப் போல கேட்பவரைக் கிலி கொள்ளச் செய்யும் நாடுகளும் உலகில் எத்தனை உண்டென்று விரல்விட்டு எண்ணிவிடலாம். [...]