என் பெயர் மயூரேசன். என் பெயரின் அர்த்தம் கணபதி. அதாவது ஒரு தடவை அசுரர்களுடன் சண்டையிட வாகனம் இல்லாமல் விநாயகர் இருந்திருக்கின்றார். அப்போது தேவர்கள் சேர்ந்து மயிலை வாகனமாகக் கொடுத்தார்களாம். மயிலில் பயனித்த விநாயகருக்கு மயூரேசன் என்று பெயர் கொடுத்தார்களாம். இதுதான் என் பெயரின் பின்ணனி.
நான் கொழும்பு, களனிப் பல்கலைக்கழகத்தில் முகாமையும் தகவல் தொழில் நுட்பமும் என்னும் பிரிவில் கல்விகற்றவன். B.Sc. MIT (Management and Information Technology) என்பதே நான் கற்றும் கற்கைநெறி. தற்போது வேர்த்துசா எனும் நிறுவனத்தில் Software QA Engineer ஆகப் பணிபுரிகின்றேன்.
என் ஆர்வம் என்று சொன்னால், தமிழ்.. தமிழ்.. தமிழ்… என்று சொல்லலாம். கணனி, இணையம் என்பனவும் என் ஆர்வமான பகுதிகள். இணையத்தில் பல தமிழ் சார் குழு முயற்சிகளில் பங்கெடுத்துவருகின்றேன். ஆயினும் இப்போது நேரம் இல்லாததால் இந்த வலைப்பதிவிற்குள்ளாகவே நேரம் கடந்துவிடுகின்றது. ஆயினும் தமிழை கணனி மயமாக்கும் என் பயனம் தொடர்ந்துகொண்டேயிருக்கும்.
அன்புடன்,
மயூரேசன்

