58 : சாப்ட்வேர் இன்ஜினீயரின் கதறல்

சி கோடு எழுதத் தெரிந்த எனக்கு
உன் மனக் கோடு புரியவில்லையே!
சீ நான் ஒரு முட்டாள்
SQL Query எழுதிய மரமண்டைக்கு
வெறும் காதல் தியறி விளங்கவில்லையே!
UML கீறிய நேரத்தில்
உனக்கு கம்மல் கொடுத்திட எனக்கு தோன்றவில்லையே!
மல்டி நஷனல் கம்பனி தேடி அலைந்தேன்
ஏன் தெரியுமோ?
உனக்கு மல்டிக் கலரி்ல் புடவை வாங்கத்தான்!
உன் மனமோ Wikipedia
அதில் எழுத ஓடோடி வந்தேன்
யாரவன் மாற்றினான் அதை Encarta வாக
அழிந்து போக அந்த பில்கேட்சு
நீ என்னை வெறுக்கின்றாயா?
பரவாயில்லை
உன்னுள் ஒரு நாள் Application ஆக இல்லாவிட்டாலும்
Love Bug ஆகவாவது வருவேன்!
அது வரை Trojan Horse ஆக
உன்னைக் கண்காணிப்பேன்!
எது இருந்தென்ன!
உன் Data Base ல்
நான் இல்லையே….
ம்… உன் Hard disk ல் இடமில்லாவிட்டால்
RAM ல் ஒரு தடவை இடம் தரமாட்டாயா?

16 Responses

Page 1 of 1
 1. செந்தழல் ரவி
  செந்தழல் ரவி January 23, 2007 at 5:20 am |

  :)))))))))

 2. சுந்தர் / Sundar
  சுந்தர் / Sundar January 23, 2007 at 5:20 am |

  சுப்பர் மாமே!

 3. நாமக்கல் சிபி
  நாமக்கல் சிபி January 23, 2007 at 5:32 am |

  அடப் பாவமே!

  :)))

 4. mayooresan மயூரேசன்
  mayooresan மயூரேசன் January 23, 2007 at 9:51 am |

  அன்பின் சுந்தர், செந்தழல் ரவி, சிபி ஆகிய மூவருக்கும் நன்றிகள்!
  உங்களை சிரிக்க வைத்த திருப்தி இருக்கு பாருங்க அது தான் நமக்கு சந்தோசம். :)

 5. பிரதீப்
  பிரதீப் January 23, 2007 at 1:24 pm |

  மயூரா,
  என்ன இது புது அவதாரம், மென்பொருள் வல்லுநர்களை சும்மா பின்னிப் பெடலெடுத்து விட்டாயே…

  இப்படியெல்லாம் இத்தனை நாளா பாடத் தெரியாமப் போயிருச்சேப்பா…

 6. mayooresan மயூரேசன்
  mayooresan மயூரேசன் January 23, 2007 at 1:33 pm |

  //என்ன இது புது அவதாரம், மென்பொருள் வல்லுநர்களை சும்மா பின்னிப் பெடலெடுத்து விட்டாயே..//
  எல்லாம் சும்மா ஒரு முயற்சிதானே! :)

  //இப்படியெல்லாம் இத்தனை நாளா பாடத் தெரியாமப் போயிருச்சேப்பா…//
  யாருக்குத் தெரியும்! நெசத்தில நானும் சாப்வேர் இன்ஜினியரானாப்புறம் எனக்கும் இப்படியெல்லாம் எழுத வராதாக்கும்.

 7. Ramasamy Lakshmanan
  Ramasamy Lakshmanan January 23, 2007 at 5:53 pm |

  நல்ல ஆக்கம்.
  இந்த இடத்தில் நான் சமீபத்தில் இணையத்தில் படித்த இந்த கவிதை
  YAHOO விடும் தூது
  என்னைக் கவர்ந்தது…

 8. வெட்டிப்பயல்
  வெட்டிப்பயல் January 24, 2007 at 9:26 am |

  அருமையா எழுதியிருக்கீங்க மயூரேசன்…

  :-))))

 9. priya
  priya January 25, 2007 at 9:21 am |

  very nice!but i thing this’s yor own experience, im the correct mayuran?

 10. mayooresan மயூரேசன்
  mayooresan மயூரேசன் January 27, 2007 at 9:32 am |

  லக்ஸ்மணன், வெட்டிப்பயல், பிரியா ஆகிய யாவருக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் நன்றி….
  நண்பர்களே உங்கள் கருத்துக்களுக்கு!

 11. Anonymous
  Anonymous January 30, 2007 at 6:21 am |

  எழுதுவது “படியாதவன்”
  நல்ல கவிதை.
  மயூரேசன், நீங்கள் களனி கம்பசிலயா படிக்கிறீங்க?
  எந்த மட்டம்?
  நான் மொரட்டுவை கம்பசில படிக்கிறன்.
  எனக்கும் வலைப்பதிவொண்டு தொடங்க ஆசைதான், பாப்பம்.

  ஒரு சந்தேகம், உங்கட நிறைய சொற்பிரயோகங்கள் தமிழ்நாட்டு
  சகோதரர்களினது போல் உள்ளது, உ+ம்: “சாப்ட்வேர்” “கோடு” “பிளாக்கர்” “நெசத்துல” “பாருங்க”.

  இங்க வழக்கமா “சொவ்ட்வெயார்”,”கோட்” “புளொக்கர்” .. அப்பிடித்தானே பாவிப்பம்?
  அப்பிடி எழுதினா மற்றவை வாசிக்கமாட்டினம் எண்டு நினைக்கிறீங்களா?

 12. -/பெயரிலி.
  -/பெயரிலி. January 30, 2007 at 6:21 am |

  சாப்ட்வேர் இன்ஜினீயர் //
  சொஃப்ட்வெயர் எஞ்சினியர் ???

 13. மயூரேசன் Mayooresan
  மயூரேசன் Mayooresan March 23, 2007 at 7:00 pm |

  மொரட்டுவை நண்பா.. அப்படியெல்லம் இல்லை.. அதிகமாக அவர்களுடன் இணையத்தில் உரையாடுவதால் அவர்கிளின் தமிழ் வந்து கலந்து விடுகின்றது.. என்ன செய்ய??

 14. ஜி - Z
  ஜி - Z March 23, 2007 at 7:10 pm |

  ஆஹா…. சும்மா பட்டைய கெளப்பிட்டீங்க மயூர்..

 15. lokesh
  lokesh November 26, 2009 at 2:52 am |

  hi……… this is very nice one. ;-)

 16. SRINIVASAN.M
  SRINIVASAN.M December 23, 2010 at 8:30 am |

  Beautiful… :!: by srinivasan.M

Leave a Reply

%d bloggers like this: