கண்தெரியாத பலரும் Text to Speech எனும் தொழில்நுட்பம் மூலம் இணையப் பக்கங்களை வாசிப்பதுண்டு. இந்த தொழில்நுட்பம் இத்தனை காலமும் தமிழுக்கு கிடைக்கவில்லை. இன்று நிமலின் ட்விட்டின் மூலம் இந்த தொழில்நுட்பம் தமிழுக்கும் வந்துவிட்டது என்பதை அறிந்து பேருவகை கொண்டேன்.
http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ என்ற முகவரிக்குச் சென்று அங்கே தமிழில் தட்டச்சு செய்து “Submit” எனும் பொத்தானை அமுக்குங்கள். பின்னர் வரும் சாரளத்தில் வரும் தொடுப்பை சொடுக்கி பேச்சைக் கேளுங்கள். நீங்கள் தட்டச்சு செய்ய எழுத்துக்களை ஒரு ஆண் பேசிக் காட்டுவார்.
text-to-speech & speech-to-text தமிழ் என்ன?
பன்னுதல் – பனுவல்
text-to-speech – பனுவொலி
speech-to-text – ஒலிப்பனு
உரை – டெக்ஸ்ட்டுக்கு இங்கே பொருத்தமில்லை
(உரை = முதற்பொருள் பேச்சு).
எழுத்தின் ஒலி = பனுவொலி
ஒலியின் எழுத்து = ஒலிப்பனு.
வேறு பரிந்துரைகள்?
கணேசன்
Does this software take care of the intervocalic -k- sound
as a voiceless fricative sound observed by linguists of Tamil?
It is very important in Tamil TTS software.
Can you check & tell me please.
N. Ganesan
பெரும்பாலான பலுக்கல்கள் சிறப்பாக உள்ளன. மகிழ்ச்சியாக இருக்கிறது.
சொற்றொடர்கள் சிறப்பாக வந்ததால் வெண்பா இட்டு செப்பலோசை வருதான்னு பாத்தேன்.. வரலையே
ரொம்ப அருமை . இந்த முயற்சி பாராட்டுக்குரியது .இனி குறைகள் வராமல் மேம்படுத்தலாம்
அட! நன்றாக இருக்கே.