6 Responses

Page 1 of 1
  1. ravishankar
    ravishankar August 28, 2007 at 6:54 pm |

    மயூ, கூகுளில் தமிழ் இடைமுகப்பு எல்லா சேவையிலும் இல்லை என்பதை விட இந்த அரை குறை கண்றாவி மொழிபெயர்ப்பு கவலை அளிக்கிறது. account = கணக்கு என்று கூடவா மொழிபெயர்த்தவருக்குத் தெரியாது? anjal anuappuga போன்ற தமிழ் கொலைகள் வேறு. இந்த சொதப்பலுக்கு கூகுளுக்குப் பெரும் பொறுப்பு உண்டு. அதன் மொழிமாற்ற platform சுத்த வீண். மொழிபெயர்ப்பாளர்களிடையே ஒருங்கிணைப்புக்கு ஒரு வழியும் இல்லை. 6 கோடி தமிழர் உள்ளதுக்கு நியாயப்படி பார்த்தால் கூகுள் இந்த மொழியாக்கத்தை காசு கொடுத்தே செய்திருக்க வேண்டும். குறைந்தது, அதன் மொழிக் கோப்புகளை .po வடிவில் தந்தாலாவது நாமாவது செய்யலாம். அது வரை ஆர்வம் இருந்தாலும், அதன் மொழிபெயர்ப்புத் தளம் ஒருங்கிணைப்புக்கு உகந்ததாய் இல்லை

  2. Floraipuyal
    Floraipuyal August 29, 2007 at 4:13 am |

    உண்மையில் கூகிள் பல மொழிகளை கவனிப்பதே இல்லை. இதில் தமிழும் அடங்கும். ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுவதும் தமிழ்ச் சொற்கள் என்று பல கொச்சை சொற்களும் ஆங்கில எழுத்துக்களில் தமிழ்ச் சொற்களும் நிறைந்துள்ளது. நான் பலமணி நேரம் செலவிட்டு எழுதிய சொற்களை கூகிள் ஏற்றுக் கொள்ளவே இல்லை. இவ்வளவிற்கும் நான் எழுதிய அனைத்துச் சொற்களுக்கும் விளக்கத்துடன் அகரமுதலியின் சுட்டியும் கொடுத்திருந்தேன்.
    பலமுறை எழுதி கேட்ட பின் ஒரு முறை எங்கள் மொழி பெயர்ப்பாளர்கள் மீது எங்களுக்கு மிக்க நம்பிக்கை இருக்கிறது. எனவே அவர்களால் மொழிமாற்ற முடியாத சொற்களை மட்டுமே ஏற்போம் என்பது போன்ற ஒரு மின்னஞ்சல் வந்தது. அதிலிருந்து என் நேரத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டேன்.
    தமிழ் மட்டுமல்ல இன்னும் பல மொழியினர் புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.
    மேலும் கூகிளைப் பொறுத்தவரை இந்தியாவின் மொழி இந்தி மட்டுமே என்ற கருத்து வலுவாக இருப்பதாகத் தோன்றுகிறது.

  3. ரவிசங்கர்
    ரவிசங்கர் August 30, 2007 at 10:44 am |

    கூகுளில் அதிக இந்தி பேசும் இந்தியர்கள் வேலை பார்ப்பதால் அவர்களின் பார்வையும் இந்தி வழியாகவே இருக்கலாம். தமிழ் மாணவர்கள் எல்லாம் நல்லா படிச்சு போய் கூகுளில் சேருங்கய்ய :)

    மயூரேசன், நீங்கள் சொல்வது போல் இந்திய மொழிகள் மேல் யாகூ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறதாம். சுந்தர் மூலம் அறிந்த தகவல். கூகுள் விழித்துக் கொண்டால் சரி

Leave a Reply

%d bloggers like this: