பல்கலையிலும் சரி வீட்டிலும் சரி உபுண்டு பாவிக்கச்சொல்லி யாரும் கரைச்சல் படுத்தினதில்லை. அதனால நானும் என்ட பாடுமாக களவெடுத்த விண்டோஸ் XPல் காலம் தள்ளிக்கொண்டிருந்தேன். பின்னர் ஒருநாள் உபுண்டு சீ.டி ஒன்றை அனுப்பச்சொல்லி கனோனிக்கள் காரங்களிட்ட சொல்லிப்போட்டன். அவன் வேற கேட்டுக் கேள்வியில்லாம 5 சீ.டிக்களை நான் கேட்டபடி அனுப்பிப் போட்டான்.
சீ.டிக்கள் தாபாலில் வந்து கிடைத்த நிமிடம் ஒரே தர்ம சங்கடமாகிவிட்டது. இவங்கள் மினக்கட்டு அனுப்பியிருக்காங்களே, இந்த சீ.டியை அநியாயமாக விடக்கூடாது என்று நினைத்தேன். அதன் விழைவாக எனது தங்கையில் மடிக்கணனியில் உபுண்டு குடிபுகுந்தார். ஆனாலும் அடிக்கடி வரும் கேள்விகளை இணையத்தில் கூட தேடாமல் மயூரனை துரத்தி துரத்தி கேட்டு வெறுப்பேற்றினேன்.
ஆனாலும் என்னால் தமிழ் 99 தட்டச்சு முறையை உபுண்டுவில் கொண்டுவரமுடியவில்லை. இதற்கிடையில் உபுண்டு பிடித்துப்போய் எனது மேசைக் கணனியிலும் நிறுவிட்டேன். உபுண்டுவை தொடர்ந்து பாவிக்க ஒரே தடைக்கல்லாக இருந்த காரணி இந்த தமிழ் 99 உள்ளீடு செய்ய முடுயாமல் இருந்தமையே.
உபுண்டு மன்றங்கள் பலவற்றில் கேட்டும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மீண்டும் மயூரனை பிடித்து பிப்பிலி ஆட்டலாம் என்று நினைத்தேன். என்றாலும் இவை SCIM எனும் செயலியின் மூலமே நடப்பதாக அறிந்து கொண்டேன். ஆகவே அந்த செயலியை முதலில் நிறுவுவோம் என்று நினைத்தவாறே இணையத்தில் “Installing SCIM on Ubuntu 9.04″ என்று தேடி கிடைத்த முடிவின் படி
- System –> Administration –> Synaptic Package Manager போயி
- scim-m17n ஐ தேடி
- scim-m17n அருகில் உள்ள செக் பெட்டியை சொடுக்கி
- வரும் தெரிவுகளில் Mark for Installation ஐத் தெரிவு செய்து
- Apply பட்டனை சொடுக்கி
- நிறுவிக்கொண்டேன்
ஒரு தடவை Log off ஆகி மீள Log on ஆகுங்கள்.
இப்போது Applications –> Accessories –> Text Editor மூலம் டெக்ஸ் எடிட்டரை திறந்து கொள்ளுங்கள். பின்னர் CTRL + SPACE BAR என்ற விசைகளை அமத்தவும். இப்போது வலது கீழ் மூலையில் உங்களுக்கு ஒரு மெனு கிடைக்கும். காண்க படம். அதில் உங்களுக்குப் பிடித்தமான தமிழ் 99 முறைமையை தெரிவு செய்து கொள்க.
அடியேன் ஏதும் பிழை விட்டிருந்தால் சுட்டிக்காட்டவும்.
இணையத்தில் புடித்த ஏனைய உசாத்துணைகள்
- ஆமாச்சுவின் உபுண்டுவில் தமிழ் 99 பற்றிய பதிவு
- Tamil Input Method for GNU/Linux User Guide (இலங்கை அரசிடம் இருந்து)
அடியேன் மேலும் இப்படியான உபுண்டுப் பதிவுகளைப் போடலாம் என்று இருக்கின்றேன். விரும்பினால் அறியத் தாருங்கள்.

உபுண்டு பதிவுகளின் அத்தனை உள்ளடக்கங்களும் Creative Commons Attribution-Share Alike 3.0 License அடிப்படையில் கட்டற்ற பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

நானும் உபுண்டு சீடி வரவழைத்து இன்னும் கணனியில் நிறுவதா வேண்டாமா என யோசித்து கொண்டிருக்கிறேன். பாமிணி முறையில் தட்டச்சு செய்ய உபுண்டு ஆதரவு தருமா? தருமென்றால் நானும் உபுண்டுவுக்கு மாறலாம் என இருக்கிறேன்
மிக்க நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள்
நன்றி
வணக்கம் மயூரேசன்
நானும் இதைதான் தேடிக்கொண்டு இருந்தேன்
தங்கள் பதிவு மிகவும் உபயோகமாக இருந்தது.
இராஜராஜன்
scim ரொம்ப நாளாகவே இருக்கே!!
நல்ல தகவல். நன்றி!
@யோகா
மயூரனிடன் இன்று தொலைபேசும்போது உபுண்டுக்கான பாமினியின் பதிப்பை வெளியிடுவதில் மீள கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். நிச்சயம் அவர் விரைவில் வெளியிடுவார். அப்போது நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்.
@தமிழ்ஹக்X
பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே. உங்கள் தளம் பிரமாதம்.
@இராஜராஜன்
நன்றி நண்பரே. உதவக் கிடைத்தமையிட்டு மகிழ்ச்சி
@வடுவூர்குமார்
அடியேனுக்கு இப்பத்தானே தெரியும். உபுண்டு சூனியம் நான்
@சூர்யா கண்ணன்
நன்றி நண்பரே
புதிய தகவல் நண்பரே!!
இப்படியே புதிய தகவல்கள் தொடரட்டும்!!
உபுண்டுவில் மயூரன் ஆக்கித்தந்த பாலினியை நான் பலகாலமாக பயன்படுத்துகிறேன்.
[...] 3. SCIM – For typing Tamil in Ubuntu. [...]
flash drive via ubundu eppidinga boot seyrathu?
help Tamil
read
how to taip tamil word?
Very good. I folloe it
[...] [...]
ibus மூலமாகவும் தமிழ் உருக்களை பயன்படுத்த முடியும்
[...] 5. SCIM – For typing Tamil in Ubuntu. [...]