Feed on
Posts
Comments

ஏற்கனவே முடிவு செய்தபடி இன்று மதியக் காட்சிக்குச் சென்று தசாவதாரம் திரைப்படம் பார்த்தாகிவிட்டது. 2.30 காட்சிக்கு 12.30 க்கே சென்று வெயிலில் காய்ந்ததும், உள்ளே நுழைய முயற்சிக்கையில் மோர் கடைபடுவது போல ஒரேயடியாக நசுங்கி பொசுங்கியதும் வேறு கதை. அடித்துப் பிடித்து மரதானை சினி சிட்டியினுள் நுழைந்து ஒரு சீட்டுப் புடிச்சு உட்கார்ந்தாகிவிட்டது.

வழமை போல விளம்பரங்களுடன் காட்சி ஆரம்பமாகியது. உள்ளே வந்த சந்தோஷத்தில் இரசிகர்கள் திரையில் காட்டுவது எல்லாத்த்துக்கும் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். ஒரேயடியாக வெயிலில் நின்று சடார் என்று ஏ/சி க்குள் விட்டால் இப்படித்தான் மண்டை குளம்புமாக்கும். விளம்பரங்களை அடுத்து சத்தியம் திரைப்பட ட்ரேயிலரும் போட்டுக் காட்டினார்கள். விஷால் கலக்கலாக அக்சன் காட்சிகளில் கலக்கியிருப்பதாகத் தெரிகின்றது.

எல்லாம் முடிந்து திரைப்படம் தொடங்கியது. கதையின் ஆரம்பம் தமிழ்நாட்டில். குலோத்தூங்க சோழனுக்கும் ஒரு விஷ்ணு பக்தருக்கும் இடையில் ஏற்படும் கல கலப்பு. சைவமா வைனவமா சிறப்பானது என்பதில் கமலுக்கும் (ராமானுஜன்) நெப்போலியனுக்கும் (குலோத்தூங்க சோழன்) கல கலப்பு. 12 ம் நூற்றாண்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அழகாக படமாக்கி திரைக்கதையிற்கு ஒரு தொடுப்பும் கொடுத்திருக்கின்றார்கள். இந்த காட்சிகளைப் பார்க்கும் போது பொன்னியின் செல்வனை நிச்சயமாகத் தமிழில் எடுக்கலாம் என்ற நம்பிக்கை என் மனதில் அடியில் ஊற்றுப் பெற்றது.

மொத்தம் பத்து வேடத்தில் கமல் நடித்திருந்தார். பத்து வேடமும் என்ன என்ன என்பது எனக்கு கூட ஞாபகத்தில் நின்ற பாடில்லை எப்படித்தான் கமல் ஞாபகத்தில் வைத்து நடித்தாரே?? ;)

திரைப்படத்தைப் பார்ப்பதாக இருந்தால் இதற்கு மேல் வாசிக்க வேண்டாம்…

நாயகன் கமல் அமெரிக்காவில் நுன் உயிரியலில் பி.எச்.டி பட்டம் பெற்று ஒரு ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுகின்றார். இவர்கள் கண்டுபிடிக்கும் ஒரு உயிரியல் ஆயுதம் ஒரு பிரதேசத்தையே அழிக்க கூடியது. இதை நடுநிலைப் படுத்த NaCl பயன்படுத்த வேண்டும். அதாவது உப்பு நீர்.

இதை களவாடி வேற்றார் கையில் விற்க அதே ஆய்வு கூடத்தில் முயற்சி நடக்கிறது. இதையறிந்து அந்த உயிரியல் ஆயுதத்தை களவாடி FBI கையில் ஒப்படைக்க கமல் முயற்சிக்கின்றார். ஆனால் விதி வேறு விதமாக விளையாடி இவரை இந்தியாவிற்கு அந்த உயரியல் ஆயுதத்துடன் வர வழைத்துவிடுகின்றது. அங்கே நம்ம அசின் பொண்ணை வேறு சந்தித்து தொலைத்து விடுகின்றார்.

இந்த உயிரியல் ஆயுதத்தைக் கைப்பற்ற அமெரிக்காவில் இருந்து கமலை விடாமல் ஒரு வெள்ளைக்கார வில்லன் துரத்துகின்றார். அந்த வெள்ளைக்கார வில்லனும் கமல்தான். இந்த வெள்ளைக்கார வில்லன் கமலைத் துரத்தும் போது கமலின் நண்பன் ஒருவனின் ஜப்பானிய மனைவியைக் கொலை செய்துவிடுகின்றான். இதனால் கோவமடையும் அந்த ஜப்பானிய நங்கையின் அண்ணா வில்லன் கமலை இறுதியில் ஒன்டிக்கு ஒன்டியாக சந்திப்பது வேறு கதை. இந்த ஜப்பானிய பாத்திரமும் கமல்தான்.

இந்தியாவை வந்தடையும் கமல் அங்கே பொலீசாரால் கைது செய்யப்படுகின்றார். இவரைக் கைது செய்யும் ஒரு தெலுங்கு காரப் பொலீஸ்காரன் அடிக்கும் கூத்து ஒரே ரகளை. தெலுங்கு பேசுபவர்களின் உச்சரிப்பில் இவர் பேசும் தமிழ் ஜோராக இருந்தது. இந்த பொலீஸ் அதிகாரியும் ஒரு கமல்தான். இந்தியாவில அதிகமாக பேசப்படுற மொழி ஹிந்தி, அதுக்கடுத்ததாக பேசப்படுறது தெலுங்கு, அதுக்கடுத்ததுதான் தமிழ். இப்படியா இருக்கையில் தெலுங்கு காரனான நானே தமிழைப் படித்து பேசும் போது நீ என்ன இங்கிலீசில பேசுறாய் என்று கேட்பது நச்.

இதைவிட பாட்டி, தலித்து, புஷ், சர்தர் ஜூ என்று பல வேடங்களில் கமல். அந்த உயிரியல் குண்டு வெடித்ததா இல்லையா என்பதுதான் மிகுதிக் கதை. திரைப்படத்தில் கதை என்று சொல்வதற்கு பெரிதாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. பிரமாண்டம், மற்றும் கமலின் புதுமையான நடிப்பு. குறிப்பாக பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுத்தி நடிக்கும் நடிப்பு திரைப்படத்தை இலயித்து பார்க்க வைக்கின்றது.

மல்லிகா ஷெரவாத் ஒரேயடிக காற்று வாங்கிக் கொண்டே நடித்திருக்கின்றார். சில வேளைகளில் அந்நேரத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருந்ததால் அப்படியாக உடை அணிந்தாரோ தெரியவில்லை.

சில கொலை நடக்கும் காட்சிகள் சிறுவர்களுடன் பார்க்க தகுந்தது என்று நான் நினைக்கவில்லை. ஆகவே சிறுவர்களை அழைத்துச் செல்வதானால் யோசித்துச் செல்லுங்கள். கடைசி வந்தாலும் திருட்டு சீடியில் இந்த திரைப்படத்தைப் பார்க்காதீர்கள். தியட்டர் காட்சியமைப்பு, ஒளி, ஒலி அமைப்பில் பார்க்காவிட்டால் இந்த திரைப்படம் சப்பையாக இருக்கும்.

மொத்தத்தில் கமல் தான் ஒரு வண் மான் ஆர்மி என்பதை நிரூபித்திருக்கின்றார். ஆகா ஓகே பேஷ் பலே என்றேல்லாம் பாராட்ட மாட்டேன். ஆனால் வித்தாயாசமான இந்த முயற்சியை திரையில் கண்டு களிக்கலாம்.

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இடம்: கொழும்பு
நேரம்: காலை 7.30
ஆண்டு: 2019

விந்தியா தனது கையில் இருக்கும் பையை இறுக்க அணைத்தபடி நடந்து கொண்டிருந்தாள். வீதி வெறிச்சோடிக் கிடந்தது. தனது நடையை மெல்ல மெல்ல வேகப்படுத்திக்கொண்டே வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கையில் இருக்கும் அந்தப் பையின் பெறுமதி அவளுக்குத்தான் தெரியும். வீட்டில் அனைவரும் இந்தப் பையில் இருப்பதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள். யார் கண்ணிலும் பட்டுவிடமால் சென்றுவிடவேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். பத்து ஆண்டுகளுக்கு முதல் இந்த இடத்தில் இந்நேரத்தில் சனம் சும்மா ஜே.. ஜே… என்று நடமாடும். இப்போ எல்லாம் தலைகீழ்.

சிந்தனைகளில் சுழன்றவாறு நடந்துகொண்டிருந்தாள் விந்தியா. அந்த சந்தியைக் கடந்துவிட்டால் தன் வீட்டை அடுத்த 5 நிமிடத்தில் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் நடையின் விரைவைக் கூட்டியவாறு சந்தியை நேக்கி நடக்கத் தொடங்கினாள்.

திடீர் என்று எங்கிருந்தோ ஒரு அடிபட்டு நெளிந்த டாடா இன்டிகா காரில் நான்கைந்து இளைஞர்கள். கார் சத்தைத்தை விட அவர்கள் போட்ட சத்தமே அதிகமாக இருந்தது. ஒருத்தன் காது குத்தியிருந்தான் மற்றவன் கண்இமையில் ஏதோ குத்தியிருந்தான்.

“டேய் அங்க பாருடா! ஏய்……….. என்ன கையில?” காரில் இருந்த ஒருத்தன் ஊளையிட்டான்.

குனிந்த தலை நிமிராமல் விந்தியா அந்த இடத்தில் இருந்து மெல்ல நகரத் தொடங்கினால். அவளை சிறிது கடந்து நின்று இருந்த கார் இப்போது, கிரீச் என்ற சத்ததோடு அவள் முன்னால் வந்து நின்றது. காரில் இருந்து நான்று இளைஞர்களும் தட தடவென இறங்கினர். ஒவ்வொருத்தன் கண்ணிலும் வெறி தாண்டவமாடியது.

ஒரு அடி முன்னுக்கு எடுத்து வைத்த ஒருத்தன் விந்தியா கையில் இருந்த பையை பறித்தான். பையை திறந்து உள்ளே பார்த்தவன், மற்றவர்களைப் பார்த்து புன்னகையுடன் தலையாட்டினான்.

“டேய்… தாடா!!!” விந்தியா பறித்தவன் கன்னத்தில் சடார் என்று ஒரு அறை விட்டாள். அறைந்த சத்தம் ஓய்வதற்குள் ஒரு சத்தம் ‘டுமீல்’. விந்தியாவின் உடல் கீழே சரிய அவள் உடலில் இருந்து இரத்தன் குபு குபு என வெளியேறத் தொடங்கியது.

விந்தியாவிற்கு சுய நினைவு மெல்ல மெல்ல அகலத் தொடங்கியது. கண்கள் இருட்டத் தொடங்கியது. கடைசியாக கண் மூட முன்னர், தன் பையில் இருந்த பாண் துண்டை அந்தக் கயவர்கள் விலங்குகளைப் போல பிய்த்து உண்பதைக் கண்டாள். மெல்ல மெல்ல அவள் உலகம் இருளத் தொடங்கியது.

பி.கு: யுத்தம் விரைவில் ஓயாவிட்டால் ஒருநாள் ஸ்ரீ லங்காவில் இது நடக்கப் போவது நிச்சயம

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இப்போது ஜிமெயிலுக்குத் தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டுள்ளது. தமிழுடன் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஜிமெயில் இடைமுகம் வழங்கப்படுகின்றது. இந்த சேவை மூலம் கிட்டத்தட்ட 90 வீதமான இந்தியர்கள் தமது சொந்த மொழியில் ஜிமெயிலைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் இடைமுகத்தைப் பெற்றுக்கொள்ள settings சென்று Language என்பதில் தமிழ் என்பதைத் தெரிவு செய்யுங்கள்…

கூகிள் வாழ்க… தமிழ் அதனிலும் ஓங்கி வாழ்க.

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

200px}}Image via Wikipedia

பாவப் பட்ட ஜக்கி சான், உலகில் எத்தனையோ நகரங்கள் இருக்க எங்கட சென்னைக்கு வந்தார். தசாவதாரம் இசை வெளியீட்டு விழாவிலும் குடு குடு என்று சிறு பிள்ளை போல கலக்கினார். இருந்ததவர்களை எல்லாம் தன் கள்ளம் கபடமற்ற செயல்களால் சிரிக்க வைத்தார். வணக்கம் என தமிழில் சொல்லி பேசத் தொடங்கினார்.

எல்லாம் முடிந்து ஊர் திரும்பினால் அவருக்கு துன்பம் காத்திருந்தது. இவர் இந்தியாவில் மற்றய இந்தியக் கலைஞர்களை மதிக்கவில்லை, இந்தியாவின் தண்ணீர் போத்தலில் தண்ணி குடிக்கவில்லை, என்றெல்லாம் சில ஊடகங்கள் இவரை வைதுள்ளன. இதனால் மனமுடைந்த ஜாக்கி இது பற்றி தனது தளத்தில் மனமுருகி எழுதியுள்ளார்.

ஏன்தான் நம் ஊர் காரங்களுக்கு இந்த கோணல் புத்தியோ?

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

WordPress 2.5.1 வெளிவந்துள்ளது. இதில் முந்தய பதிப்பில் இருந்த பாதுகாப்புப் பிரைச்சனைகள் நீக்கப்பட்டதுடன், செயற்பாட்டு வினைத்திறனும் அதிகரிக்க வைக்கப்பட்டுள்ளது.

  • Performance improvements for the Dashboard, Write Post, and Edit Comments pages.
  • Better performance for those who have many categories
  • Media Uploader fixes
  • An upgrade to TinyMCE 3.0.7
  • Widget Administration fixes
  • Various usability improvements
  • Layout fixes for IE

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

வழமை போல புதிய வேர்ட்பிரஸ் பதிப்பான 2.5 கிடைத்ததும் அதை இற்றைப்படுத்த முடிவெடுத்தேன். நான் பொதுவாக பன்டாடிஸ்கோ இடைமுகம் மூலம் ஒரு சொடுக்கலில் இற்றைப்படுத்திவிடுவது வழமை.

இம்முறையும் அதைப்போல தமிழ், ஆங்கிலம் இரு வலைப்பதிவுகளையும் இற்றைப்படுத்தினேன். முதலில் ஆங்கிலப் பதிவை இற்றைப்படுத்தினேன். என்னதான் ஆங்கிலப் வலைப்பதிவிற்கு அதிகமானோர் வந்தாலும் தமிழ் வலைப்பதிவு மேல் இருக்கும் அன்பு அதன் மேல் இல்லை. அதனால் சோதனை எல்லாம் ஆங்கிலப் பதிவு மேல்தான்.

ஆங்கிலப் பதிவு இற்றைப்படுத்தப்பட்டதும், தளத்தைச் சென்று பார்த்தேன் அனைத்தும் ஜோராக இருந்தது. உடனே தமிழ் பதிவையும் இற்றைப்படுத்தினேன் அங்குதான் விளைந்தது துன்பம். Continue Reading »

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

எனது வலைப்பதிவில் ஜோராக வேலைசெய்துகொண்டிருந்த தமி்ழ்மணம் கருவிப்பட்டை, வேர்ட்பிரஸ்பக்கங்களுக்கு அர்த்தமுள்ள முகவரி கொடுத்ததும் செயல் இழந்துவிட்டது. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நோண்டி நோண்டி பார்த்ததில் எனக்குப் புரிந்த பிழை இதுதான். Continue Reading »

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

பல தளங்களில் SMS இலவசமாகவும் பணம் வசூலித்துக்கொண்டும் பெறுவதைக் காணலாம். இந்த சேவையை உங்கள் தளத்தில் நீங்களும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டுரை இலங்கையின் மொபிடல் வலைப்பின்னலை மையமாக வைத்தே எழுதப் பட்டுள்ளது இந்திய நண்பர்கள் கீழுள்ள விபரங்களைப் பாருங்கள். Continue Reading »

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

தமிழ் கூகிள் டொக்ஸ்கூகிள் நிறுவனம் தமது கூகிள் டொக்ஸ் சேவையில் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளைச் சேர்த்துள்ளது. வழமைபோல அதிகமானோரால் எதிர்பார்க்கப்படும் ஜிமெயில் இன்னமும் தமிழில் வரவில்லை!

இதன் தமிழ் மொழி சொற் பிழை திருத்தி படுபயங்கரமாக வேலைசெய்கின்றது. இதை நம்பி யாராவது தமிழில் எழுதப் போனால் தமிழ் தாய் தற்கொலை செய்துவிடுவாள்.

இந்த சேவையை தமிழில் பெற Continue Reading »

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

இன்று அனேகமான தளங்களில் கூகிள் அட்சென்ஸ் பாவிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பெரிய தளங்கள் முதல் சின்ன சின்ன வலைப்பதிவுகள் வரை இந்த சேவையைப் பயன்படுத்துகின்றன. இந்த பணம் கறக்கும் பசுவில் இருந்து எவ்வாறு மேலதிகமாகப் பால் கறக்கலாம் என்பது பற்றிய ஒரு சிறிய குறிப்பு. Continue Reading »

Enjoyed my post.. then buy me a cofee

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

Older Posts »